!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

சனி, 12 டிசம்பர், 2015

தண்ணீரில் நனைந்த ஆவணம் சான்றிதழை காய வைப்பது எப்படி?
வெள்ளத்தில் நனைந்த புத்தகம், சான்றிதழ், சொத்து ஆவணங்கள், ரூபாய் நோட்டுகளை, மீண்டும் பழைய நிலைக்கு மாற்றுவது எப்படி என, நுாலக நிபுணர் ஒருவர் விளக்கம்  அளித்துள்ளார்.

தஞ்சாவூர், சரஸ்வதி மஹால் நுாலக முன்னாள் காப்பாளர் முனைவர் பெருமாள் கூறியதாவது:
* அடுப்புக்கு அருகில் வைப்பது, சூடான பாத்திரங்களின் மீது ஒட்டி வைப்பது கூடாது. ஈர அட்டை, பைண்டிங் அட்டையை நீக்க வேண்டும். இதமான அறை இருந்தால், சிறிதாக சூடு தரும் பல்புகளை எரிய விட்டு, மின் விசிறி உதவியுடன் காய வைக்கலாம். 
* தாள்கள், ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்கும் வகையில், சிறிய நுால் அல்லது மெல்லிய கயிற்றில், அதை தொங்க விட்டு உலர்த்தலாம்
* 'வேக்யூம் க்ளீனர்' அல்லது, 'ஹேர் டிரையர்' போன்ற குறைந்த வெப்பம் உமிழும் கருவிகளால், வெப்ப காற்றை அடித்து, ஈரத்தை வெளியேற்றலாம்
* முக்கியமான ஆவணங்கள், சான்றிதழ்கள் உலர வைக்க எளிய முறை உள்ளது. அதாவது, 'சிலிகா ஜெல்' என்ற பொருளை ரசாயன கடைகளில் வாங்கி, அதை சிறிய பெட்டிக்குள் வைத்து, நனைந்த முக்கிய ஆவணங்களை வைத்து மூடி விட வேண்டும்


* சிலிகா ஜெல் நீல நிறமாக இருக்கும். அது புத்தகத்தின் ஈரத்தை உறிஞ்சி, இளஞ்சிவப்பாக மாறும். பின், பெட்டியை திறந்து, சிலிகா ஜெல்லை வெளியே வைத்தால், அதிலுள்ள ஈரம் காற்றில் பரவி, மீண்டும் அது நீல நிறத்துக்கு மாறும். பின், மீண்டும் ஈரத்தாள்களை உலர வைக்க பயன்படுத்தலாம்
* சில புத்தகங்கள் வெளிப்பகுதி மட்டும் நல்ல ஈரமாக இருக்கும். அதை நீரை உறிஞ்சும் காட்டன் துணியில் சுற்றி வைத்து, உலர வைக்கலாம் 
* ஈர புத்தகங்கள் மற்றும் ஈரப்பத ஆவணங்கள் போன்றவற்றில் காளான் பூத்து, பூச்சிகள் வராமல் தடுக்க, 'தைமால்' என்ற ரசாயன பொருளை, புத்தகங்கள், அலமாரிகள் மீது தெளிக்க வேண்டும். புத்தகங்களை உலர வைப்பது ஒரு புறம் இருந்தாலும், அதை காளான் அல்லது பூச்சி வராமல் பாதுகாப்பது முக்கியம்
* இறுதியாக ஈரப்பதமான புத்தகங்கள் மற்றும் ஆவணங்களால் வெளியாகும் வாயுவை கட்டுப்படுத்த, வசம்பு பயன்படுத்தலாம். வசம்பு வாங்கி வந்து, அவற்றை பிரித்து பல இடங்களில் வீட்டுக்குள் வைத்தால், ஈர புத்தக நாற்றம் மாறும்; பூச்சிகளும் வராது.இவ்வாறு அவர் கூறினார்.


ரூபாய் நோட்டு...:




வெள்ளத்தில் நனைந்த ரூபாய் நோட்டுகள் இருந்தால், அதை உலர வைப்பது எளிதாகும். ரூபாய் நோட்டு தாள்கள், பருத்தித் துணி பொருட்களால் ஆனது. எனவே, அவை ஈரமாக இருந்தால், 'ஹேண்ட் மேட்' காகிதம் அல்லது, 'லாட்டின்' காகிதம் வாங்கி, அதில் ஒரு ரூபாய் நோட்டு, ஒரு காகிதம் என, மாற்றி, மாற்றி வைத்தால், சில நிமிடங்களில், ஈரம் உறிஞ்சப்படும். சேற்றில் சிக்கி ரூபாய் நோட்டு அழுக்காக இருந்தால், அதை நீரில் கழுவியும், இந்த முறையில், உலர வைக்கலாம்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png