!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வெள்ளி, 11 டிசம்பர், 2015

பழநி பள்ளிகளில் ஈரம் சிரமத்தில் மாணவர்கள்

தொடர் மழையால் பழநி பகுதியிலுள்ள தொடக்கப் பள்ளிகளில் தரையில் அமர்ந்து படிக்க முடியாமல் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஒருவார காலமாக சாரல்மழை பெய்து வருகிறது. பழநி பகுதியிலும் இது நீடிப்பதால் வீடு, பள்ளி கட்டட சுவர்களில் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. இருக்கை வசதி இல்லாத தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளியில் ஈரத்தரையில் அமர்ந்து 5 வயது முதல் 12 வயது வரையுள்ள மாணவர்கள் 

படிக்கின்றனர். இதில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் குளிர்ந்த தரையில் அமர்ந்து படிக்க முடியாமல் நடுங்குகின்றனர். இதனால் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.பள்ளிகளுக்கு மாணவர் களின் வருகையும் குறைந்துஉள்ளது. பெஞ்ச் வசதி இல்லாத பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தொடக்க கல்விதுறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,“ பழநியில் நடுநிலை, தொடக்க பள்ளிகள் என 76 பள்ளிகள் உள்ளது. தொப்பம்பட்டியில் நுாற்றுக்கு மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. அனைவருக்கும் கல்விஇயக்கம் சார்பில் பாய்கள், பெட்ஷீட் வழங்கப்பட்டுஉள்ளது. மழையால் தரை ஈரமாக இருந்தால் அவற்றை பயன்படுத்த ஆசிரியர்களை அறிவுறுத்தியுள்ளோம். 

பள்ளிக்கு விடுமுறை விடுவது தொடர்பாக உயர் அதிகாரிகள் தான் முடிவு செய்யவேண்டும்,” என்றார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png