!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வெள்ளி, 11 டிசம்பர், 2015

படிக்காதவர்கள் தேர்தலில் போட்டியிட...முடியாது சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு
ஹரியானா மாநிலத்தில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட, குறைந்தபட்ச கல்வித் தகுதியை கட்டாயமாக்கி, அம்மாநில சட்டசபையில் நிறைவேறிய புதிய சட்டத்துக்கு, தடை விதிக்க, சுப்ரீம் கோர்ட் மறுத்துள்ளது. கல்வித் தகுதி சட்டம், நாட்டின் பிற மாநிலங்களிலும் இயற்றப்படும் வாய்ப்பை, இத்தீர்ப்பு ஏற்படுத்தி உள்ளது.

ஹரியானா மாநிலத்தில், பா.ஜ.,வை சேர்ந்த மனோகர் லால் கட்டார் முதல்வராக உள்ளார். இங்கு, 'உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட, பொது வேட்பாளர்கள், குறைந்தபட்சம், 10ம் வகுப்பும், பெண்கள், எட்டாம் வகுப்பும், தலித் வேட்பாளர்கள், ஐந்தாம் வகுப்பும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்' என்ற விதிமுறைகளுடன், செப்., 7ல், சட்ட சபையில், சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டது. 

இச்சட்ட திருத்தத்தை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. மனுக்களை பரிசீலித்த சுப்ரீம் கோர்ட் பெஞ்ச், அக்டோபரில் நடக்கவிருந்த உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைத்தது. இதனால், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வந்த பின், வேறு தேதியை அறிவிப்பதாக, தேர்தல் கமிஷன் கூறியது. 

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில், நீதிபதி, சலமேஸ்வர் தலைமையிலான பெஞ்ச், தேர்தலில் போட்டியிட, குறைந்த பட்ச கல்வித் தகுதி நிபந்தனையை எதிர்க்கும் மனுக்களை, நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 


சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு விவரம்:




ஹரியானா மாநில அரசு அறிமுகப்படுத்தும் புதிய சட்டம், அரசியல் சாசனப்படி, செல்லத்தக்கது. தேர்தலில் போட்டியிடுவோரின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு அடிப்படையில், இந்த சட்டத்தை ரத்து செய்ய முடியாது. புதிய சட்டத்தை அமல்படுத்த, மாநில சட்டசபைக்கு அதிகாரம் உண்டு. இவ்வாறு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இத்தீர்ப்பை அடுத்து, ஹரியானா மாநிலத்தில், பஞ்சாயத்து சமிதி, ஜில்லா பரிஷத்துகளில், உறுப்பினர்களாக, 72 ஆயிரம் பேரை, தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், குறைந்தபட்ச கல்வி அவசியம் என்ற கட்டுப்பாட்டுடன் நடைபெற உள்ளது. 

சுப்ரீம் கோர்ட்டில், அரசு சார்பில் ஆஜரான, அட்டார்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி, 'உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோருக்கு, இரு குழந்தைகளுக்கு மேல் இருக்கக் கூடாது என்ற விதிமுறையையும் அமல்படுத்த வேண்டும்' எனக் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பால், தேர்தலில் போட்டியிட, தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும் சட்டங்கள், மற்ற மாநிலங்களிலும் இயற்றப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக, நிபுணர்கள் கூறுகின்றனர்.


கழிப்பறை அவசியம்!




ஹரியானா மாநில அரசு நிறைவேற்றியுள்ள சட்டப்படி, வீட்டில் கழிப்பறை இல்லாதவர்கள் கூட, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியாது. ஹரியானா மாநில அரசின் புதிய சட்டத்தில் இடம் பெற்றுள்ள கட்டுப்பாடுகள் விவரம்:உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோர், விவசாயக் கடனை, குறித்த காலத்தில் செலுத்தி இருக்க வேண்டும். இல்லாவிடில், தேர்தல் கனவை மறந்து விட வேண்டியதுதான். தவிர, வீட்டின் மின் கட்டண பில்லில் பாக்கி இருந்தாலும், போட்டியிட முடியாது. வீட்டில், கழிப்பறை அவசியம் இருக்க வேண்டும். 


ராஜஸ்தானுக்கும் பொருந்தும்:




சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு, ராஜஸ்தான் மாநிலத்தில் ஏற்கனவே, நிறைவேறிய சட்டத்துக்கும் பொருந்தும் எனத் தெரிகிறது. ராஜஸ்தானில், பா.ஜ.,வை சேர்ந்த, வசுந்தராராஜே முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட, குறைந்தபட்ச கல்வித் தகுதியை அவசியமாக்கி சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இன்னமும் அமல்படுத்தப்படாமல் உள்ளது. 

தற்போது, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட, கல்வித் தகுதியை கட்டாயமாக்கும், ஹரியானா மாநில அரசின் சட்டத்துக்கு தடை விதிக்க, சுப்ரீம் கோர்ட் மறுத்துள்ளதால், இது தொடர்பான, ராஜஸ்தான் மாநில அரசின் சட்டத்துக்கும் புத்துயிர் கிடைத்துள்ளது. 'கல்வி அறிவு அவசியம் தேவை என்பதை வலியுறுத்தும் வகையில், தீர்ப்பு உள்ளதால், பொதுமக்கள் அனைவரும், கல்வி கற்பதில் ஆர்வம் காட்டத் துவங்குவர்' என, நிபுணர்கள் கூறுகின்றனர். 

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png