!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

செவ்வாய், 8 டிசம்பர், 2015

கஷ்டப்பட்டு படிக்க வைத்த தந்தை வீட்டை விட்டு வெளியேற்றம்: 'ஆசிரிய' மகன்களின் 'பாசம்'

'கஷ்டப்பட்டு வளர்த்து, வேலைவாங்கிக் கொடுத்தும், வீட்டை விட்டு வெளியேறி, சொத்தை பங்கிட்டு தரும்படி கொலை மிரட்டல் விடுப்பதாக, 
ஆசிரியர்களான மகன்கள் மீது, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஒருவர் திண்டுக்கல் எஸ்.பி., சரவணனிடம் புகார் தெரிவித்தார்.திண்டுக்கல் பன்றிமலை சுவாமிகள் தெருவை சேர்ந்தவர் நலவேந்தன். ஓய்வு பெற்ற பள்ளித் தலைமை ஆசிரியர். இவர் திண்டுக்கல் எஸ்.பி., சரவணனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:எனக்கு ௨ ஆண், 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் மூத்த மகன் பாக்கியசேனன் அரசு பள்ளி தலைமை ஆசிரியராக உள்ளார். இளைய மகன் கபிலன், அரசு பள்ளியில் ஆசிரியர். எனது மகன்களுக்கு திண்டுக்கல் ஆர்.எம்., காலனி மற்றும் நிலக்கோட்டையில் வீடுகள் வழங்கியுள்ளேன்.திண்டுக்கல் மாசிலாமணிபுரத்தில் எனது பெயரில் வீடு உள்ளது. இந்த வீட்டையும் தங்கள் பெயருக்கு எழுதி கொடுக்க வேண்டுமென எனது மகன்கள் இருவரும் என்னை வற்புறுத்துகின்றனர். நான் இறந்த பின்பு இந்த வீட்டை 4 பேரும் பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள் என நான் விருப்புறுதி ஆவணம் எழுதி வைத்துள்ளேன்.

இதையறியாமல் மகன்கள் இருவரும் அரசாங்கத்தில் ஏராளமான சம்பளம், தாராளமான சலுகைகள் பெற்று கொண்டு என்னை தொந்தரவு செய்கின்றனர். இவர்களுக்கு பயந்து வீட்டை விட்டு வெளியேறி வாடகைக்கு குடியிருந்து வருகிறேன்.எனது வீட்டை எழுதி தருமாறு சண்டையிட்டு, வன்முறையில் ஈடுபடுகின்றனர். கொலை மிரட்டலும் விடுகின்றனர். நான் அவர்களை படிக்க வைக்கவும், வேலை வாங்கி தரவும் கஷ்டப்பட்டுள்ளேன். போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். இது குறித்து விசாரிக்க நகர் வடக்கு டி.எஸ்.பி., சிகாமணிக்கு, எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png