!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

சனி, 19 டிசம்பர், 2015

'ஆடர்லி' பணியில் அரசு பள்ளி மாணவர்கள்!

கோவையில் நடக்கும், மாநில அளவிலான குடியரசு தின தடகள போட்டியில், அரசு பள்ளி மாணவர்களை, 'எடுபிடி' வேலைக்கு பயன்படுத்திய சம்பவம் அரங்கேறியது.மாநிலம் முழுவதும் உள்ள மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான, 2014 - 15ம் ஆண்டுக்கான, மாநில அளவிலான குடியரசு தின தடகள போட்டிகள், தமிழக பள்ளிக்கல்வித்துறையால், கோவை நேரு ஸ்டேடியத்தில் நடத்தப்படுகிறது.


மூன்று நாட்கள் நடக்கும் தடகள போட்டி துவக்கவிழா நேற்று நடந்தது. போட்டி துவக்க விழாவுக்கு, பூத்தொட்டிகள் அடுக்குவது, வி.ஐ.பி.,க்கள் நடக்கும் பகுதியில், தரை விரிப்பு விரிப்பது போன்ற பணிகளில், கோவை அரசு பள்ளி மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். கலை நிகழ்ச்சி முடிந்ததும், சிதறிக்கிடந்த குப்பையை மாணவர்கள் அகற்றினர்.துவக்க விழா முடிந்ததும், அடுக்கிய பூந்தொட்டிகளையும், தரை விரிப்புகளையும் மாணவர்களே அகற்றினர். ஸ்டேடியத்தில், வி.ஐ.பி.,க்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள் அமர்வதற்காக இருக்கைகளை மாணவர்களே அங்கும் இங்கும் மாறி மாறி துாக்கிக்கொண்டு அலைந்தனர்.

இதுதவிர, ஸ்டேடியம் வளாகத்தில், 20 லிட்டர் தண்ணீர் கேன்களை தேவையான இடங்களை வைத்து பராமரிக்கும் பணியில் மாணவர்கள் ஈடுபட்டனர்.



காலையில், டிபன், டீ, பிஸ்கட், வடை போன்றவற்றை, நிகழ்ச்சிக்கு சீருடையில் வந்திருந்த மாணவர்கள் சப்ளை செய்தனர். மதியம், 'பப்பே' முறையில், அரசு பள்ளி மாணவர்களே, சாப்பாடும் பரிமாறினர்.தங்கள் வயதுள்ள மாணவர்கள் விளையாடும் போது, அவர்கள் முன்னிலையில், குப்பை பொறுக்குவது, தண்ணீர் கொடுப்பது, சாப்பாடு சப்ளை என, எடுபிடி வேலைகளுக்கு, கோவை மாணவர்கள் பயன்படுத்தப்பட்டதால், மன ரீதியான பாதிப்பில் இருந்து தப்ப முடியாது.



பெயர் வெளியிட விரும்பாத அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், ''தடகள விளையாட்டு போட்டிக்கு, வெளி மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் வந்துள்ளனர். தடகள போட்டியின் போது, உடற்கல்வி ஆசிரியர்களுக்கு 'டேப்' பிடித்து உதவ, கோவை அரசு பள்ளி மாணவர்கள், 50 பேரை அழைத்து வந்தனர்.

''ஆனால், உயர் அதிகாரிகள் வீடுகளில், 'ஆடர்லி' வேலைக்கு, பணியாளர்களை நியமிப்பதை போன்று, தடகள போட்டியில் அரசு பள்ளி மாணவர்களை நியமித்து விட்டனர். இந்த வேலைகளை செய்யவும், தடகள போட்டியை நடத்தவும் அரசு நிதி ஒதுக்குகிறது. அப்படியிருக்கையில், சக வயதுள்ள மாணவர்கள் முன்னிலையில், இதுபோன்ற வேலைகளில் ஈடுபடுத்துவதை தவிர்த்திருக்க வேண்டும்,'' என்றார்.



தடகள போட்டிகளுக்கான ஏற்பாடுகளை செய்திருந்த முதன்மை கல்வி அலுவலர் அருள்முருகனிடம் கேட்டபோது, ''துப்புரவு பணி, சாப்பாடு சப்ளை, தண்ணீர் கேன் எடுப்பதற்கு தனியாக ஆட்களை நியமித்துள்ளோம். உடற்கல்வி ஆசிரியர்களுக்கு சிறு சிறு உதவிகள் செய்வதற்காக, என்.எஸ்.எஸ்., மாணவர்கள் வந்துள்ளனர். அவர்களுக்கு கடினமான வேலைகள் எதுவும் வழங்கப்படுவதில்லை,'' என்றார்.-

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png