!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வியாழன், 31 டிசம்பர், 2015

ஆதார் கார்டு இல்லாவிட்டால் ரேஷன் பொருள் ரத்து?

நாமக்கல் மாவட்டம் முழுவதும், ரேஷன் கடைகளில் ஆதார் கார்டு ஜெராக்ஸ் கொடுக்க வேண்டும் எனவும், தவறினால் வரும் ஜன., முதல் பொருட்கள் வழங்கப்பட மாட்டாது' என, ரேஷன் கடை ஊழியர்கள் பொதுமக்களிடம் தெரிவித்துள்ளனர். பிளக்ஸ் போர்டும் வைக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து, ரேஷன் கடை ஊழியர்கள் கூறியதாவது: கடந்த வாரம் நடந்த கலெக்டர் மீட்டிங்கில், 'ரேஷன் கார்டுகளுக்கு, குடும்பத்தலைவரின் ஆதார் கார்டு ஜெராக்ஸ் வாங்கி வைக்க வேண்டும். தருபவர்களுக்கு மட்டுமே, வரும் ஜன., மாதம் ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும். தவறியவர்களுக்கு பொருட்களை வழங்கக்கூடாது' என, அதிகாரிகள் வாய்மொழி உத்தரவிட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ப.வேலூர், வட்ட வழங்கல் அலுவலர் பெரியசாமி கூறியதாவது: மக்கள் அனைவரும் ஆதார் கார்டு வாங்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் கூறியுள்ளோம். ஆதார் கார்டு அவசியம் வேண்டும். தவறினாலும், ரேஷன் பொருட்கள் வழங்கப்படும். பொதுமக்கள் பயப்பட அவசியமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதுபற்றி, பொதுமக்கள் கூறியதாவது: ரேஷன் கடைகளில், 'குடும்பத் தலைவர் ஆதார் கார்டு ஜெராக்ஸ் இணைக்க வேண்டும். இல்லையேல் பொருட்கள் தரப்படமாட்டாது' என, உறுதியாக ரேஷன்கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், உச்சநீதிமன்றம் கடந்த அக்டோபர் மாதம் தெரிவித்த உத்தரவுப்படி, 'இந்திய குடிமகனுக்கு, ஆதார் கார்டு இல்லையென்பதற்காக அவர்களது அடிப்படை உரிமை பறிக்கப்படக்கூடாது' என, தெளிவாக உத்தரவு பிறப்பித்துள்ளது. மாவட்ட நிர்வாகம் தெளிவாக விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png