!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வியாழன், 31 டிசம்பர், 2015

'மார்னிங் அசெம்பிளி' கல்லூரிகளில் கட்டாயம்

பெங்களூரு- ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில், 'மார்னிங் அசெம்பிளி' நடப்பது போல், இனி மாநிலம் முழுவதும் அனைத்து கல்லுாரிகளிலும் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் கடைபிடிக்கப்பட்டு வரும், மார்னிங் அசெம்பிளி முறையை அனைத்து கல்லுாரிகளிலும், தினமும், 10 நிமிடம் கடைபிடிக்க, பல்கலைக்கழக உயர்கல்வித் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.உயர்கல்வி துறை வெளியிட்டுள்ள அறிக்கை:இதன் மூலம், உயர் கல்வியின் தரம் உயர்வதுடன், மாணவர்களிடம் அன்றாடம் கருத்து பரிமாற்றங்களை பகிர்ந்து கொள்வது, மாணவர், - ஆசிரியர்களிடையே நல்லுறவை வளர்க்கும் என, உயர்கல்வி துறை கருதுகிறது. 

மாணவர்கள் மட்டுமின்றி கல்லுாரி முதல்வர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், கல்லுாரி ஊழியர்கள் அனைவரும் இந்த, 10 நிமிட மார்னிங் அசெம்பிளியில் பங்கேற்பது அவசியம். இந்த அசெம்பிளியின் போது, மாணவர்களிடையே என்னென்ன விஷயங்கள் பரிமாறி கொள்ளப்பட்டன என்ற தகவலை, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், கல்லுாரி முதல்வர்கள், ce.commissioner@gmail.com என்ற இணையதளத்துக்கு தகவல் அனுப்ப வேண்டும்.

அசெம்பிளியின் போது, அறிவு திறனை வளர்ப்பது எப்படி; தொலை தொடர்பு திறமை, வேலை வாய்ப்புகளை எப்படி பெறுவது; தகவல் தொடர்பு தொழில் முறையை எப்படி பயன்படுத்துவது; அன்றாட நிகழ்வுகள் மனித வளத்தை மேம்படுத்துவது போன்ற தகவல்கள் குறித்து கல்லுாரி முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்களிடையே விவாதிக்க வேண்டும். இந்த விதிமுறை அரசு, அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் மட்டுமின்றி, தனியார் 
கல்லுாரிகளுக்கும் பொருந்தும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png