!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 30 டிசம்பர், 2015

ஜாதிய முறை தீங்கானது; ஒழிக்க வேண்டும் :உயர்நீதிமன்றம் உத்தரவு

நம் நாட்டில், ஜாதிய முறையை சில சுயநலவாதிகள் உள்நோக்குடன் செயற்கையாக வளர்க்கின்றனர். ஜாதிய முறை தீங்கானது; அதை விரைவாக ஒழிக்க வேண்டும். அம்பாசமுத்திரம் உணவுப் பாதுகாப்பு அலுவலர் மீது பதிவான வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கு ரத்து செய்யப்படுகிறது,' என உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டது.

அம்பாசமுத்திரம் ஒன்றிய உணவுப் பாதுகாப்பு அலுவலர் நாகசுப்பிரமணியன். இவரிடம் மன்னார்கோவில் அருணாசலம் என்பவர் டீக்கடை, மளிகைக் கடையை பதிவு செய்யக் கோரி விண்ணப்பித்தார்.நாகசுப்பிரமணியன் ஆய்வு செய்து, ''கடையில் பல பொருட்கள் தரமின்றி உள்ளன. கடையை கூரை கட்டடத்தில், தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து வைத்துள்ளீர்கள். குறைகளை நிவர்த்தி செய்து, தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறையின் தடையில்லாச் சான்று பெற வேண்டும்,'' என்றார். 

இதற்கு அருணாசலம் தரப்பில் எதிர்ப்பு வந்தது. அருணாசலம் புகாரின்பேரில், நாகசுப்பிரமணியன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், அம்பாசமுத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.வழக்கிலிருந்து விடுவிக்க உத்தர விடக்கோரி நாகசுப்பிர மணியன் தாக்கல் செய்த மனுவை, திருநெல்வேலி 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் (பி.சி.ஆர்.,) தள்ளுபடி செய்தது. இதை ரத்து செய்யக் கோரி அவர், உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்தார்.

நீதிபதி எஸ்.விமலா: நம் நாட்டில், ஜாதிய முறையை சில சுயநலவாதிகள் உள்நோக்குடன் செயற்கையாக வளர்க்கின்றனர். ஜாதிய முறை தீங்கானது; அதை விரைவாக ஒழிக்க வேண்டும். மனுதாரர் அரசுத்துறையில் பணியாற்றும் பொது ஊழியர். அவரது கடமையை செய்யும் போது, அவர் மீது உரியஅனுமதியின்றி வழக்குத் தொடர முடியாது. 

மனுதாரர் பணியின்போது சோதனை நடத்தியதற்கு ஆதாரமாக, பயணக்குறிப்பு உட்பட சில ஆவணங்களை தாக்கல் செய்துள்ளார். இதை விசாரணை அதிகாரி ஆய்வு செய்யவில்லை. எந்த வழக்கையும் திறந்த மனதுடன் போலீசார் விசாரிக்க வேண்டும். மனுதாரருக்கு போலீசார் பாதுகாப்பு அளிக்காமல், வேறு மாதிரி செயல்பட்டுள்ளனர். பொது ஊழியர் கடமையை நிறைவேற்ற உதவி செய்திருக்க வேண்டும். தான் அவமானப்படுத்தப்பட்டதாக மனுதாரர் கூறுகிறார். கீழமை நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது, என்றார். மனுதாரர் ஆஜரானார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png