!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

செவ்வாய், 22 டிசம்பர், 2015

மிரட்டலுடன் முடிகிறது வட கிழக்கு பருவ மழை

வட கிழக்கு பருவ மழையின் கடைசி கட்டமான இந்த வாரத்தின் இறுதி நாட்கள், மிரட்டலுடன் முடிவுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

வட கிழக்கு பருவ மழை, அக்டோபரில் துவங்கி, டிசம்பரில் முடியும். நடப்பு பருவ மழை, அக்டோபரில் எதிர்பார்த்த அளவு இல்லை. ஆனால், நவம்பர் மற்றும் டிசம்பரில் பெய்த மழை, பெரும் வெள்ளத்தை ஏற்படுத்தியது. தற்போது, வட கிழக்கு பருவ மழை இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.அடுத்த, நான்கு நாட்களுக்கு, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அடுத்த, இரு நாட்களுக்கு தமிழகத்தில் லேசான மழை பெய்யலாம். டிச., 26 வரை, வறண்ட வானிலையே தென்படுகிறது' என, கூறப்பட்டுள்ளது. ஆனால், தனியார் வானிலை ஆய்வு மையங்கள், 'டிச., 27 முதல், அடுத்த மூன்று நாட்களுக்கு தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது' என, கணித்துள்ளன.

இதுகுறித்து, டில்லியை தலைமையிடமாக கொண்டுள்ள, 'ஸ்கை மெட்' தனியார் வானிலை மையம், நேற்று வெளியிட்ட அறிக்கை: டிச., 27ல், தெற்கு அந்தமான கடல் பகுதியில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து, மேற்கு மற்றும் வட மேற்கு நோக்கி நகரலாம். இதனால், தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கன மழை பெய்யலாம். குறிப்பாக, ராமேஸ்வரம், நாகப்பட்டினம், காரைக்காலில் மிக கன மழை பெய்யும்.சென்னையில், 27, 28ம் தேதிகளில், கன மழை பெய்ய வாய்ப்பு உண்டு. ஆனால், வெள்ளம் ஏற்படும் அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை. இந்த மழையே, வட கிழக்கு பருவ மழையின் இறுதி கட்டமாக இருக்கும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

குமரி கடலில் நிலவிய காற்று மேலடுக்கு சுழற்சி, லட்சத் தீவு மற்றும் மாலத் தீவு பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளது. இதனால், நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக, நெல்லை மாவட்டம், பாபநாசம் - 11, கன்னியாகுமரி - 8, நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் - 5 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png