!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 9 டிசம்பர், 2015

எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் கல்வி உதவித் தொகை வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

பொறியியல் படிப்பு பயிலும் எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை, குறித்த நேரத்தில் வழங்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

 இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக இணைப்பு பொறியியல் கல்லூரிகளின் நிர்வாகிகள் சங்கத்தின் தலைவர் கே.பரமசிவம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:

 தனியார் பொறியியல் கல்லூரிகளில் அரசு, நிர்வாக இடஒதுக்கீட்டின் கீழ் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இதில், எஸ்.சி., எஸ்.டி., பிரிவு மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை அரசு வழங்குகிறது. ஆனால், இந்தத் தொகை 2 தவணைகளாக வழங்கப்படுகிறது. அதாவது முதல் ஆண்டு படிப்பில் சேர்ந்து 8 மாதங்களுக்கு பின்னர் 40 சதவீதத் தொகையையும், 18 மாதங்களுக்குப் பின்னர் மீதமுள்ள 60 சதவீதத் தொகையையும் அரசு வழங்குகிறது. இதுகுறித்து கடந்த நவம்பர் 9-ஆம் தேதி அரசிடம் மனு அளித்தோம். ஆனால், இதுவரை பதிலளிக்கவில்லை.

 எனவே, எஸ்.சி., எஸ்.டி., பிரிவு மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை வங்கிகள் மூலம் நாங்கள் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
 இந்த மனு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் சஞ்சய் காந்தி, இந்த மனுவுக்கு பதிலளிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார். இதையடுத்து, மனுவுக்கு 2 வாரங்களுக்குள் தமிழக அரசு பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png