!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 23 டிசம்பர், 2015

எதிர்பார்ப்பு ! : நீதிபோதனை வகுப்பு கட்டாயமாக்கப்படுமா : திசை மாறும் மாணவர்களால் வேதனை
நீதிபோதனை வகுப்பு பள்ளிகளில் பெயரளவில் இருப்பதால்,மாணவர்கள் திசை மாறி வருகின்றனர். எனவே இதை கட்டாயமாக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, பெற்றோரிடையே எழுந்துள்ளது.

அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு நீதிபோதனை வகுப்பு என்ற சிறப்பு பாடத்திட்டம், பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்தது.


வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு பாட வேளைகள் இதற்காக ஒதுக்கப்படும். இந்த பாட வேளைகளில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு, நல்ல பழக்க வழக்கம் கொண்ட கதை,பெரியவர்களுக்கு மதிப்பு கொடுத்தல், கீழ்படிதல், நீதி, நேர்மை, உண்மை குறித்து சொல்லி கொடுப்பார்கள். ""மதிப்பெண் ஒன்றே மாணவரின் குறிக்கோள்'' என்ற நிலை வந்தபோது, இந்த வகுப்பு காணாமல் போனது. நீதி போதனை வகுப்பு கற்பித்த ஆசிரியர்கள் ஓய்வு பெற்ற பின் அந்த பாடத்துக்கு புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.

நீதி போதனை கற்பிக்க வழியின்றி, மாணவர்கள் நாளடைவில், வகுப்பில் தங்களை அடிக்கும் ஆசிரியர்களை மாணவர்கள் திருப்பி அடித்தல், பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களை கேலி செய்வது, போதை பழக்கத்துக்கு அடிமையாவது, பள்ளிகளில் ஆசிரியர்கள் தாக்கினால், ஜாதி பாகுபாட்டை கூறி அவரை தண்டிக்க வழி தேடுவது, சமூக விரோதிகளை உடந்தையாக வைத்து கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

மாணவர்களை விட ஆசிரியர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர், என்கிறது சமீபத்திய ஆய்வு. இந்நிலையில் 2014-15-ம் கல்வி ஆண்டில், ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மீண்டும் நீதி போதனை வகுப்பு என்ற திட்டத்தை பள்ளி கல்வித்துறை அறிமுகப்படுத்தியது. ஆனால், அது தொடர்ந்து பின்பற்றப்படுகிறதா? என்பதை கண்காணிக்கவில்லை. இதற்கென தனியாக ஆசிரியர்களும் நியமிக்கப்படவில்லை. இதனால், பள்ளிகளும் இதை கண்டு கொள்வதில்லை. நீதி போதனை வகுப்புக்கு ஒதுக்கப்பட்ட பாட வேளைகளில், வேறு பாடங்களை நடத்தப்படுகின்றன. பள்ளியில் சேர்க்கும்போது சேர்க்கை விண்ணப்பத்தில் மாணவர்கள் தவறு செய்தால் ""பள்ளியிலிருந்து நீக்குவதற்கு அந்த பள்ளிக்கு உரிமை உள்ளது,'' என்பதில் கையெழுத்திட்டுத்தான் பள்ளியில் சேருகின்றனர். ஆனால், அதை உணராமல், சில மாணவர்கள் பள்ளியின் சட்ட திட்டங்களை மீறி செயல்படுகின்றனர். இதனால், இடை நீக்கம், நிரந்தர நீக்கத்துக்கு உள்ளாகின்றனர். படிக்க வேண்டிய வயதில், பாதை மாறி வாழ்வு பயணத்தை இழக்கின்றனர். எனவே, தையல், ஓவியம், உடற்பயிற்சிக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதை போல, நீதி போதனைக்கும் தனி ஆசிரியர்களை நியமித்து, மாணவர்கள் நல்வழிப்படுத்தும் வகையிலான நடவடிக்கையை, பள்ளி கல்வித்துறை எடுக்க வேண்டும், என்ற எதிர்பார்ப்பு பெற்றோரிடையே ஏற்பட்டுள்ளது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png