!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 27 ஜனவரி, 2016

உழைக்க விருப்பம் இல்லாமல் பிச்சையெடுக்கும் 169 பட்டதாரிகள்

கர்நாடகா மாநிலத்தில், கல்வி யறிவில்லாத பாமரர்கள் மட்டுமின்றி, 125 பட்டதாரிகள், 44 தொழில்நுட்ப மற்றும் முதுநிலை பட்டதாரிகள் பிச்சையெடுத்து வாழ்க்கை நடத்தும் அவலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது; இவர்களில் 68 பேர், பெண்கள்.



'உத்தியோகம் இல்லாதவர்களின் கல்வித்திறன் மற்றும் அவர்களின் செயல்பாடுகள்' என்ற ஆய்வறிக்கையை மக்கள் கணக்கெடுப்பு ஆணையம், அண்மையில் வெளியிட்டுள்ளது. இதில், கர்நாடகாவில் படித்த பட்டதாரிகள், தங்களின் வாழ்க்கைக்காக, பிச்சையெடுப்பதை தொழிலாக வைத்துள்ளது தெரிய வந்துள்ளது.


பெங்களூரில்அதிகம்ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: கர்நாடகாவில் உள்ள, 10 ஆயிரத்து 682 பிச்சைக்காரர்களில், 2,547 பேர், படித்தவர்கள். இவர்களில், 1,446 பேர்
உயர்நிலை கல்வியும், 459 பேர் எஸ்.எஸ்.எல்.சி., அல்லது பி.யூ.சி., முடித்தவர்கள்; 23 பேர்
பட்டயப்படிப்பு முடித்தவர்கள். தலைநகர் பெங்களூருவில் தான், படித்த பிச்சைக்காரர்கள் மிக அதிகமாக உள்ளனர்.அவர்களில், 77 பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள் தவிர, 25 பட்டதாரிகள், ஏதேனும் தொழில்நுட்ப பிரிவில் பட்டயப்படிப்பும் முடித்துள்ளனர். அத்துடன், 206 பிச்சைக்காரர்கள் எஸ்.எஸ்.எல்.சி., அல்லது பி.யூ.சி., படிப்பை முடித்தவர்கள். அதிகம் படித்த பிச்சைக்காரர்கள் வசிக்கும் நகரில், பெங்களூருக்கு அடுத்த இடத்தில் மைசூரு உள்ளது. இங்கு ஒன்பது பட்டதாரிபிச்சைக்காரர்கள் உள்ளனர்.


பி.ஏ., முதலாண்டுடன், படிப்பை மூட்டை கட்டிய, வெங்கடேஷ் என்பவர், மைசூரு மிருகக்காட்சி சாலை மற்றும் அம்பா விலாஸ் அரண்மனை அருகில் பிச்சை எடுத்து வருகிறார். இவரது தந்தை இறந்த பின், படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, பெங்களூரின் தொழிற்சாலை ஒன்றில், ஐந்து ஆண்டுகளும், மைசூரு மாநகராட்சியில் இரண்டு ஆண்டுகளும் பணியாற்றி உள்ளார். 4,000 ரூபாய் சம்பளம் கிடைத்துள்ளது.சேர்த்து வைத்த பணம், தங்கையின் திருமணத்துக்கு செலவானது. அவரின் தாயார் உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளிக்க வழியில்லாமல், பிச்சையெடுக்க துவங்கினார். பிச்சை எடுப்பதால், மாதந்தோறும், 6-7 ஆயிரம் ரூபாய் கிடைப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மாநிலத்திலேயே குடகு மாவட்டத்தில் தான், பிச்சைக்காரர்கள் எண்ணிக்கை குறைவு; இங்கு, 14 கல்வி அறிவு பெற்றவர்கள் உட்பட, 30 நபர்கள் மட்டுமே பிச்சை எடுப்பதை தொழிலாக கொண்டுள்ளனர்.


சிறப்பு திட்டம்:




இதுகுறித்து சமூக நலத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பிச்சை எடுப்பதை கைவிடும்படி அரசு சார்பில் விடுத்த கோரிக்கைகளை, பல பட்டதாரி பிச்சைக்காரர்கள் நிராகரித்து விட்டனர்.
'முதற்கட்டமாக, பட்டதாரி பிச்சைக்காரர்களுக்கு கவுன்சலிங் வழங்கி, அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்கு, சிறப்பு திட்டத்தை உருவாக்கி வருகிறோம். அவர்கள், பிச்சை எடுப்பதை கைவிடுவர் என்ற நம்பிக்கை உள்ளது' என்றார்.

பாகிஸ்தான் நாளிதழ் கேலி:




பாகிஸ்தானின் வர்த்தக நகரான லாகூரில் இருந்து வெளி வரும், 'டெய்லி பாகிஸ்தான் குளோபல்' என்ற உருது நாளிதழ், சிலிக்கான் சிட்டி என்று பெருமையுடன் அழைக்கப்படும் பெங்களூரில், 169 பட்டதாரி பிச்சைக்காரர்கள் உலா வருகின்றனர் என செய்தி வெளியிட்டு, 'வியத்தகு இந்தியா'வின் நிலையை விமர்சித்து செய்தி வெளியிட்டுள்ளது.

மாவட்டங்கள் வாரியாக பிச்சைக்காரர்கள்
மாவட்டம் மொத்தம் பெண்கள் பட்டதாரிகள்
பெங்களூரு 1,368 659 102
பீதர் 1,135 588 5
கலபுரகி 828 408 1
பெலகாவி 608 276 7
துமகூரு 518 213 1
ஹாவேரி 484 240 3
பல்லாரி 463 264 4
விஜயபுரா 441 256 12
* குடகு மாவட்டத்தில் தான் பிச்சைக்காரர்கள் எண்ணிக்கை குறைவு

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png