!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

செவ்வாய், 26 ஜனவரி, 2016

10ம் வகுப்பு பொதுத் தேர்வு தமிழ் பாடத்திற்கு 'விலக்கு'

சென்னை: 'பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், பிற மொழியை தாய் மொழியாகக் கொண்ட மாணவர்களுக்கு, தமிழ் மொழி தேர்வு எழுத விலக்கு அளிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக பள்ளிகளில், தமிழ் மொழியை கட்டாயமாக்கி, 2006ல் சட்டம் இயற்றப்பட்டது. இதன்படி, 2006ல், 1ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு, அடுத்த அடுத்த ஆண்டுகளிலும் தமிழ் மொழி பாடம் கட்டாயம் ஆக்கப்பட்டது. கடந்த, 2006ல், 1ம் வகுப்பு படித்த மாணவர்கள், வரும் மார்ச் -ஏப்ரலில்,
10ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத உள்ளனர். இவர்கள், முதல் மொழி பாடத் தேர்வாக, தமிழ்த் தேர்வை எழுத வேண்டியுள்ளது. இதனால், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பிற மொழியை தாய்மொழியாகக் கொண்ட, 7,000 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மாணவர்கள், மொழி பாடத் தேர்வாக, தமிழுக்கு பதிலாக, தங்கள் தாய்மொழியில் தேர்வு எழுத அனுமதிக்கக் கோரி, பள்ளிக் கல்வித் துறைக்கு விண்ணப்பித்தனர்; அது, நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சத்தியநாராயணன் அடங்கிய, முதல் பெஞ்ச், 'தமிழ் மொழியில், மொழிப் பாடத் தேர்வு எழுத விலக்கு கோரி விண்ணப்பித்த மாணவர்களுக்கு, விலக்கு அளிக்க வேண்டும்' என, இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணை, மார்ச், 7க்கு தள்ளிவைக்கப்பட்டது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png