!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 27 ஜனவரி, 2016

என்ஜினீயரிங் கல்லூரிகளை கலை கல்லூரியாக மாற்ற 20 பேர் விருப்பம் பல்கலைக்கழக மானியக்குழு துணைத்தலைவர் பேட்டி


என்ஜினீயரிங் கல்லூரிகளை, கலை அறிவியல் கல்லூரிகளாக மாற்ற 20 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர் என்று பல்கலைக்கழக மானியக்குழு துணைத்தலைவர் பேராசிரியர் எச்.தேவராஜ் தெரிவித்தார்.

பல்கலைக்கழக மானியக்குழு துணைத்தலைவர் பேராசிரியர் எச்.தேவராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:–

மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களுக்கு ரூ.150 கோடி 

பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தால் அந்த பல்கலைக்கழகங்களின் மேம்பாட்டுக்காக பல்கலைக்கழக மானியக்குழுவிடம் இருந்து நிதி வழங்கப்படுகிறது. அதுபோல சிறந்த பல்கலைக்கழகமாக சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ஆகியவை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன. இப்போது அண்ணா பல்கலைக்கழகம் சிறந்த பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அண்ணா பல்கலைக்கழகம் உள்பட 16 பல்கலைக்கழகங்கள் சிறந்த பல்கலைக்கழகங்களாக உள்ளன. அவற்றுள் மிகச்சிறப்பாக இருக்கும் 5 பல்கலைக்கழகங்களுக்கு தலா ரூ.150 கோடி நிதி ஒதுக்கப்படும். அந்தநிதியைக் கொண்டு சமுதாயம் பயன் பெறும் அளவில் புதியவற்றை கண்டுபிடிக்கவேண்டும்.

கலை கல்லூரிகளாக மாற்ற விருப்பம் 

மாணவர்கள் வெறும் பட்டங்களை மட்டும் பெற்றால் போதாது. அவர்கள் தொழிற்சாலைகளில் பணிபுரிவதற்கு ஏற்ற திறன் படைத்தவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் நிறைய மாணவர்கள வேலைவாய்ப்பு இன்றி உள்ளனர்.

எனவே இந்தியாவில் என்ஜினீயரிங் கல்லூரிகளை கலை அறிவியல் கல்லூரிகளாக மாற்ற 20 பேர் பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். அதில் பெரும்பாலானவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

இவ்வாறு பேராசிரியர் தேவராஜ் தெரிவித்தார்.

கல்வியாளர்கள் கூட்டம் 

சர்வதேச அளவிலான கல்வியாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது. துணைவேந்தர் பேராசிரியர் மு.ராஜாராம் தலைமை தாங்கினார்.

பதிவாளர் பேராசிரியர் எஸ்.கணேசன் முன்னிலை வகித்தார்.

விழாவில் பல்கலைக்கழக மானியக்குழு துணைத்தலைவர் பேராசிரியர் எச்.தேவராஜ் பேசியதாவது:–

கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் 

நான் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு சென்றிருக்கிறேன். தமிழ்நாட்டில் உயர்கல்வி படிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வெளிநாட்டைச் சேர்ந்த கல்வி கற்பிக்கும் நிபுணர்கள் ஆயிரம் பேர் இந்திய கல்லூரிகளில் கல்வி கற்பிக்க நியமிக்கப்பட உள்ளனர்.

புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சமுதாயம் பயன்பெறும் வகையில் இன்றைய மாணவ–மாணவிகள் கண்டுபிடிக்க வேண்டும்.

கல்வி நிறுவனங்களில் தகுதியான கல்வி கற்பிக்க வேண்டும். தகுதியை மேம்படுத்த வேண்டும்.

இவ்வாறு தேவராஜ் பேசினார்.

ஐ.ஐ.டி. இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி 

ஐ.ஐ.டி. இயக்குனர் பேராசிரியர் பாஸ்கர் ராமமூர்த்தி பேசுகையில், ‘வெளிநாட்டு மாணவர்கள் சிலர் ஐ.ஐ.டி.யில் படிக்கிறார்கள். அவர்கள் முதுநிலை படிப்பில் கூடுதல் எண்ணிக்கையில் சேர ஏற்பாடு நடக்கிறது. இதற்காக கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது’ என்றார்.

ஜெர்மனி துணைத்தூதர் ஆசிம் பேபிக், ஆஸ்திரேலியா தென் இந்திய துணைத்தூதர் சீன் கெல்லி, பிரஞ்சு கவுரவ துணைத்தூதர் கவுசல்யா தேவி, ஜெர்மனியில் உள்ள அன்ஸ்பச் பல்கலைக்கழக தலைவர் யூட் அம்புரோசியஸ், அமெரிக்க துணைத்தூதர் எமிலி பெர்டிக் உள்பட பலர் பேசினார்கள்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png