!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

சனி, 30 ஜனவரி, 2016

மாணவர் சேர்க்கைக்கு அரசுப்பள்ளி ஆசிரியர்கள் வசதிகள் குறித்த நோட்டீஸ் வினியோகிக்க திட்டம்
உடுமலை, அரசு துவக்கப்பள்ளிகளில், வரும் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை பணிகள் தீவிரமடைந்துள்ளது; பிப்., இறுதி முதல் 'நோட்டீஸ் 'வினியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளனர்.



அரசு துவக்கப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை சரிவடைந்து வருவதால், பல பள்ளிகள் மூடும் நிலையை எதிர்நோக்கி வருகிறது. அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் கல்வித்துறை சார்பில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

ஆங்கில வழிக்கல்வி இல்லாததால், அடிப்படை வசதிகள் இருப்பினும், தனியார் பள்ளிகளையே பெற்றோர் தேர்ந்தெடுத்தனர். உடுமலையில், 186 அரசு துவக்கப்பள்ளிகள் உள்ளன.

இதில், கிராமப்புறங்களிலுள்ள பள்ளிகள் பலவற்றிலும், மாணவர் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், ஆங்கில வழிக் கல்வியும் துவக்க முடியாத நிலையே உள்ளது. ஆங்கில வழிக் கல்வி இல்லாததால், பெற்றோர் ஆர்வமும் இப்பள்ளிகளின் மீது திரும்புவதில்லை.

கல்வியாண்டு இறுதியில்தான் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தனியார் பள்ளிகள், மாணவர் சேர்க்கையை கல்வியாண்டு முடிவதற்குள் துவங்கிவிடுவதால், மாணவர் எண்ணிக்கை சரிவை நோக்கி செல்லும் அரசு பள்ளிகளில் மேலும் குறைகிறதே தவிர, அதிகரிப்பதில்லை. நடப்பு கல்வியாண்டில் பிப்., இறுதி முதலே மாணவர் சேர்க்கை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை துவக்க பள்ளி நிர்வாகத்தினர் தயாராகியுள்ளனர்.

பள்ளியில் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட, இணை செயல்பாடுகள், விழாக்கள், மாணவர்களின் கல்வித்திறன், அடிப்படை வசதிகள் மற்றும் பள்ளியின் சிறப்புகளை நோட்டீசாக அச்சடித்து தயாராக வைத்துள்ளனர்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png