!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

திங்கள், 1 பிப்ரவரி, 2016

61 சதவீதம் பேர் ஓய்வுக்கு தயார்: எச்.எஸ்.பி.சி., ஆய்வில் தகவல்

மும்பை: பணியிலிருக்கும் பிரச்னை, ஏற்படும் மன அழுத்தம், அதனால் உடல் நல குறைபாடு அதிகரிக்கும் வாய்ப்பு போன்ற பல காரணங்களால், இந்தியாவில் வேலை பார்க்கும் மக்களில், 45 வயதை தாண்டியவர்களில், 61 சதவீதம் பேர், 'விட்டால் போதும்; இன்னும், ஐந்தாண்டுகளில் ஓடத் தயார்' என்ற நிலையில் இருப்பதாக, எச்.எஸ்.பி.சி., வங்கி மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

எனினும், ஓய்வு பெற முடியாத வகையில், பணக்கஷ்டம், வாழ்க்கையில், 'செட்டில்' ஆகாத நிலை, வேலை பார்த்தே ஆக வேண்டிய கட்டாயம் போன்ற சூழ்நிலைகளால், இவர்கள், கஷ்டப்பட்டு வேலைக்கு சென்று வருகின்றனர். இந்நிலை, இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் காணப்படுகிறது என, அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
அந்த ஆய்வின் முக்கிய அம்சங்கள்:
* வாய்ப்பு கிடைத்தால், வேலைக்கு, 'டாட்டா' காண்பிக்க, மூன்றில், இரண்டு பங்கினர் தயாராக உள்ளனர்
* இந்த மனநிலை கொண்டவர்களில், அர்ஜென்டினாவில் தான், 78 சதவீதம் பேர் உள்ளனர். அதற்கு அடுத்த நிலையில், பிரான்ஸ், 77; சீனா, பிரிட்டன், 75; ஆஸ்திரேலியா, கனடா, 74 சதவீதம் பேர் உள்ளனர்
* ஓய்வுபெறும் மனநிலை மிகக் குறைவாக உள்ள நாடுகளில், எகிப்து, 15; ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள், 29; ஹாங்காங், 57 சதவீதமாக உள்ளது.
இந்த ஆய்வு, 17 நாடுகளில், 18 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்டுள்ளது. சரி, ஓய்வுக்குப் பின், என்ன செய்யப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு, 45 வயதுக்கு மேற்பட்டோர் அளித்துள்ள சில பதில்கள்:
* உலகம் முழுவதும், 'ஜாலியாக' சுற்றி வரப் போகிறேன் என, 55 சதவீதம் பேர் கூறியுள்ளனர்
* குடும்பத்துடன் கூடுதல் நேரம் செலவழிக்க போகிறேன் என, 44 சதவீதம் பேர் கூறியுள்ளனர்
* 'அக்கடா'ன்னு சும்மா இருக்கப் போகிறேன் என, 29 பேர் கூறியுள்ளனர் 'சரி, எதற்காக, நீங்கள் நினைத்தது போல, ஓய்வுபெற முடியவில்லை?' என்ற கேள்விக்கு...
* 'போதுமான பணத்தை இன்னும் சேர்க்கவில்லை' என, 64 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்
* 'என்னை நம்பி ஏராளமானோர் உள்ளனர்' என, 32 சதவீதம் பேர் கூறியுள்ளனர்
* 'ஏராளமாக கடன் இருக்குது சார்' என, 24 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.எச்.எஸ்.பி.சி., வங்கி, ஹாங்காங் நாட்டின் பிரபல வங்கி; உலகம் முழுவதும், ஆயிரக்கணக்கான கிளைகளை கொண்டுள்ள, மூன்றாவது பெரிய வங்கி.

61 சதவீதம் :
* வாய்ப்பு கிடைத்தால், வேலைக்கு, 'டாட்டா' காண்பிக்க, மூன்றில், இரண்டு பங்கினர் தயாராக உள்ளனர்
* இந்த மனநிலை கொண்டவர்களில், அர்ஜென்டினாவில் தான், 78 சதவீதம் பேர் உள்ளனர். அதற்கு அடுத்த நிலையில், பிரான்ஸ், 77; சீனா, பிரிட்டன், 75; ஆஸ்திரேலியா, கனடா, 74 சதவீதம் பேர் உள்ளனர்
* ஓய்வுபெறும் மனநிலை மிகக் குறைவாக உள்ள நாடுகளில், எகிப்து, 15; ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள், 29; ஹாங்காங், 57 சதவீதமாக உள்ளது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png