!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வியாழன், 28 ஜனவரி, 2016

திருப்பூரில் பயங்கரம்; நடந்தது என்ன? : பள்ளியில் மாணவன் அடித்துக்கொலை!
திருப்பூரில், தனியார் பள்ளியில் பயிலும் ஒன்றாம் வகுப்பு மாணவனை, அதே பள்ளியில் ஆறாம் வகுப்பு பயிலும் மாணவன், கல்லால் அடித்து கொன்றான். இச்சம்பவம், பெற்றோரிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர், கருவம்பாளையத்தைச் சேர்ந்தவர் அருண் பிரசாத், 35; சொந்த ஊர் மதுரை. இவர், திருப்பூர் - பல்லடம் சாலையிலுள்ள தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றுகிறார். இவரது மனைவி உதயபிரபா, 32. இவர்களுக்கு இரு மகன்கள், ஒரு மகள். மூத்த மகன் ஸ்ரீசிவராம், 5, திருப்பூர், கே.வி.ஆர்., நகரில் உள்ள, 'கதிரவன் மெட்ரிக் பள்ளி'யில், முதல் வகுப்பில் படித்து வந்தான்.


நேற்று காலை 8.15 மணியளவில் வீட்டில் உற்சாகத்துடன் கிளம்பிய இந்த சிறுவனை, பெற்றோர் பள்ளி பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர். வழக்கமான உற்சாகத்துடன் துருதுருவென காணப்பட்ட ஸ்ரீசிவராம், தனது பிஞ்சுக்கரங்களை அசைத்து பெற்றோருக்கு வாஞ்சையுடன் 'டாட்டா' காட்டியவாறு பயணித்தான்.

அதிர்ச்சியில் உறைந்தனர்

காலை 8.30 மணியளவில் பஸ், பள்ளி வளாகத்தை அடைந்ததும், முதுகில் புத்தக மூட்டையை சுமந்தவாறு, ஒரு கையில், 'லஞ்ச் பாக்ஸ்' பையை பிடித்தபடி கீழே இறங்கிய ஸ்ரீசிவராம், சக மாணவர்களுடன், தனது வகுப்பறைக்குச் சென்றான். அதன்பிறகு, என்ன நடந்ததோ தெரியவில்லை, பள்ளி வளாகமே அதிர்ச்சியில் உறைந்தது. ஆசிரியர்களும், ஊழியர்களும் பள்ளி வளாகத்திலிருந்த கழிவறை முன் திரண்டனர். தரையில், ஸ்ரீசிவராம் தலையில் பலத்த காயத்துடன், ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடந்தான். அருகில், ரத்தக்கறை படிந்த கல் ஒன்று கிடந்தது. திடுக்கிட்ட அவர்கள் பதற்றத்துடன் போலீசுக்கு தெரிவித்தனர்.

சிறுவன் கொலைச் சம்பவம் காட்டுத்தீ போல பரவ, மற்ற பிள்ளைகளின் பெற்றோர் பீதியடைந்து பள்ளியை முற்றுகையிட்டனர். விவகாரம் விஸ்வரூபம் எடுப்பதை உணர்ந்த நிர்வாகம், பள்ளிக்கு விடுமுறை விட்டது.

கலங்கிய மக்கள்

காலையில் குளிப்பாட்டி, சாப்பாடு ஊட்டி மகனை பள்ளிக்கு அனுப்பி வைத்த பெற்றோர், அடுத்த ஒரு மணி நேரத்தில் இப்படியொரு தகவல் தங்களுக்கு வரும் என கனவிலும் நினைக்கவில்லை.

'உடனே வாங்க, உங்கள் பிள்ளை கழிவறையில் சடலமாக கிடக்கிறான்' என்று போனில் அழைப்பு வர, நெஞ்சம் படபடக்க பள்ளிக்கு பதறியடித்து ஓடிவந்தனர். உயிரற்ற சடலமாக கிடந்த மகனைக்கண்டு கதறிய அவர்களின் கூக்குரல், அங்கு கூடியிருந்த, மற்ற பிள்ளைகளின் பெற்றோர் கண்களை குளமாக்கியது.

சம்பவ இடத்தை, திருப்பூர் மாநகர போலீஸ் துணைக் கமிஷனர்கள் திஷா மிட்டல், சுந்தரவடிவேல் தலைமையிலான அதிகாரிகள் பார்வையிட்டனர். ஸ்ரீசிவராமின் சடலம், பிரதே பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் கூறுகையில், 'நேற்று காலை, வகுப்பறையில் இருந்த ஸ்ரீசிவராமை, ஆறாம் வகுப்பு பயிலும் மாணவன் ஒருவன் அழைத்துச் சென்றதை மாணவர்கள் சிலர் பார்த்துள்ளனர். அதனடிப்படையில், அந்த மாணவனை பிடித்து விசாரணை நடத்தினோம். நடந்த சம்பவத்தை ஒப்புக்கொண்டான்' என்றனர்.

திருப்பூர் போலீஸ் கமிஷனர் மஞ்சு நாதா கூறுகையில், ''பள்ளிக்கு வந்த ஸ்ரீசிவராம், ஆறாம் வகுப்பு மாணவனை சீண்டியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அந்த மாணவன், கல்லால் நெற்றியில் தாக்கியுள்ளான். இதில், பலத்த காயமடைந்த ஸ்ரீசிவராம் இறந்தான். இதையடுத்து, அந்த மாணவனை திருப்பூர் ஜே.எம்., 1 மாஜிஸ்திரேட் செல்லதுரை முன் ஆஜர்படுத்தி, கோவை நகரிலுள்ள சிறார் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்துள்ளோம்,'' என்றார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png