!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வியாழன், 28 ஜனவரி, 2016

வாக்கு இயந்திரத்தில் 'பிரின்ட் அவுட்' வசதி சர்ச்சைகளை தவிர்க்க திட்டம்
 சட்டசபை தேர்தலில் பதிவாகும் வாக்குகள் குறித்த விவரங்களை 'பிரின்ட் அவுட்' எடுக்கும் வகையில், புதிய இயந்திரங்களை பயன்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. தொகுதி வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி நடக்கிறது.


பீகார், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் கூடுதல் இயந்திரங்கள் வரவழைக்கப்பட உள்ளன. இதற்காக வருவாய்த்துறை, போலீசார் இணைந்த குழுவினர் அங்கு சென்றுள்ளனர்.
'பிரின்ட் அவுட்':இயந்திரத்தில் பதிவான வாக்குகளை கணக்கிடும் வசதி மட்டுமே தற்போது உள்ளது. வாக்கு எண்ணிக்கையின் போது கட்சி முகவர்களிடம் இவை காண்பிக்கப்படும். வாக்கு நிலவரம் குறித்து, சில கட்சியினர் சர்ச்சைகளை எழுப்புகின்றனர். இதனால்
அதிகாரிகள், கட்சியினர் இடையே பிரச்னை ஏற்படுகிறது.
இதை தவிர்க்க, இயந்திரத்தில் உள்ள வாக்கு விவரங்களை 'பிரின்ட் அவுட்' எடுக்கும் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. வாக்குகள் குறித்து சர்ச்சை ஏற்படும் போது அவற்றை 'பிரின்ட் அவுட்' எடுக்கலாம்.
இதுகுறித்து தேர்தல்பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், ''பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை மட்டுமே இயந்திரத்தில் பார்க்கும் வசதி உள்ளது. அதை 'பிரின்ட் அவுட்' எடுக்கும் வசதி, வரும் தேர்தலில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. கடந்த தேர்தலில் சில தொகுதிகளில் மட்டும் இதுபோன்ற இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன,'' என்றார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png