!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 6 ஜனவரி, 2016

டி.டி.எஸ்., பிடித்தம்: ஐ.டி., ஆணையர் விளக்கம்

தமிழக அரசின் மாவட்ட கருவூலத் துறை மற்றும் சம்பள கணக்கு அதிகாரிகளுக்கான, டி.டி.எஸ்., கணக்கு விழிப்புணர்வு பயிலரங்கம், சென்னை வருமான வரி அலுவலகத்தில் நேற்று நடந்தது.இதில் 'டாக்ஸ் டிடெக்சன் பார் சர்வீஸ்' எனப்படும் டி.டி.எஸ்., பிடித்தம், வரவு வைத்தல் மற்றும் அது தொடர்பான சந்தேகங்களுக்கு, வருமான வரி அதிகாரிகள் பதில் அளித்தனர்.பயிரலங்கை துவக்கி வைத்து, வருமான வரித்துறை முதன்மை ஆணையர் ஸ்ரீவஸ்தவா பேசியதாவது:மூன்று ஆண்டுகளுக்கு முன், டி.டி.எஸ்., பிடித்தம் என்பது கையால் எழுதப்பட்டு, வருமான வரித் துறைக்கு அனுப்பப்படும். தற்போது, டி.டி.எஸ்., பிடித்தம் மற்றும் செலுத்துதல் போன்ற அனைத்து கணக்குகளும், 'ஆன்-லைனில்' மட்டுமே செய்ய வேண்டும்.



ஆன்-லைனில் செலுத்தும் போது, பல்வேறு சந்தேகங்களும், தவறுகளும் ஏற்படுகிறது. சந்தேகங்களுக்கு, உரிய பதிலை வருமான வரித்துறை அளிக்கிறது. ஆனால், பிடித்தம் மற்றும் செலுத்துதலில் ஏற்படும் தவறுகளை, தொடர்புடைய கருவூலத் துறை அதிகாரிகள் மட்டுமே சரி செய்ய முடியும்.
அரசு ஊழியர் மற்றும் அரசு வரவு செலவுகள் தொடர்பாக பிடித்தம் செய்யப்படும் டி.டி.எஸ்., தொகையை, சரியாக பிடித்தம் செய்து, தவறு இல்லாமல் ஆன்-லைனில் செலுத்த வேண்டும்.
ஆன்-லைனில் தவறாக செலுத்தும் போது, பிடித்தம் செய்தவரின் கணக்கில் பதிவாகாது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது, டி.டி.எஸ்., பிடித்தம் குறித்து குறிப்பிடவும் முடியாது. டி.டி.எஸ்., செலுத்தியிருந்தாலும் பலனில்லாமல் போய் விடும். எனவே டி.டி.எஸ்., பிடித்தம் மற்றும் செலுத்துவதை, கருவூல அதிகாரிகள் விழிப்புடன் செய்ய வேண்டும், என்றார்.டி.டி.எஸ்., ஆணையர் சேகர், இணை ஆணையர் சசிகுமார், கருவூலம், கணக்குத் துறை கூடுதல் இயக்குனர் ஜெகதீஸ்வரி பங்கேற்றனர்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png