!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

செவ்வாய், 12 ஜனவரி, 2016

ருசிக்காக... டீ, காபியில் உயிரை விடும் தேனீக்கள்: சில்வர், கண்ணாடி டம்ளர்களே தீர்வு
டீக்கடைகளின் குப்பை கூடைகளில் கொட்டப்படும் பிளாஸ்டிக் 'கப்'களால் தேனீக்கள் அழிந்து வருகின்றன'' என்கிறார், மதுரை தியாகராஜர் கல்லுாரி விலங்கியல் துறை இணை பேராசிரியர் அருண் நாகேந்திரன்.மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் சார்பில், இந்தியாவில் 16 நிறுவனங்களில் உயிர் மூலாதார மேலாண்மையில் கணித பயன்பாடுகளை ஒருங்கிணைப்பது குறித்த தேசிய மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மதுரை தியாகராஜர் கல்லுாரியிலும் இம்மையம் அமைக்கப்பட்டு ரூ.2 கோடி வழங்கப்பட்டுஉள்ளது.



இதில் ஸ்பெக்ட்ரோ போட்டோ மீட்டர், எச்.பி.எல்.சி., மற்றும் கணித சாப்ட்வேர்கள் வாங்கப்பட்டுள்ளன. இம்மையத்தின் சார்பில் தேனீக்கள் குறித்து முதற்கட்ட ஆராய்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து அருண் நாகேந்திரன் கூறியதாவது: தேனீக்கள் இனிப்பை தேடி டீக்
கடை களை நோக்கி படையெடுக்கின்றன. சமீபத்தில் அண்ணாநகர் டீக்கடைகளை ஆய்வு செய்தோம். நாகரிகம் என்ற பெயரில் சிலர் சிறிதளவு டீயை 'கப்'பில் விட்டு செல்கின்றனர்.

இவை குப்பையில் கிடக்கும் போது உலர்ந்து ஜெல்லி போலாகிறது. இந்த இனிப்பை சுவைக்க வரும் தேனீக்கள், உட் பகுதிக்குள் செல்லும்போது இனிப்பின் பிசுபிசுப்பால் வெளியேற முடியாமல் தவிக்கின்றன.

ஒரு 'கப்'பில் அதிகபட்சமாக ஐந்து தேனீக்கள் வரை விழுகின்றன. இவற்றை மொத்தமாக கொண்டு குப்பையில் கொட்டும் போது குப்பை கையாள்பவர்கள் தேனீக்களை பறக்கவிடாமல் கொன்றுவிடுகின்றனர். இதுவரை 5,000 தேனீக்கள் வரை அழிந்திருக்கலாம் என கணக்கிட்டுள்ளோம்.தேனீக்களின் மூலமே விவசாயம் செழிக்கும். மறுபடியும் சில்வர், கண்ணாடி டம்ளர்களை பயன்படுத்துவதன் மூலம் தேனீக்கள் அழிவதை தடுக்கலாம். இதுகுறித்து ஆய்வு ஒன்றையும் வெளியிட்டுள்ளோம், என்றார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png