!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 27 ஜனவரி, 2016

பள்ளிக்கல்வித்துறை அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர்கள்...


அரசு உதவிபெறும் பள்ளிகளில் நியமன தடையேதும் இல்லாத நிலையில் ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி அறிக்கை வெளியிடப்பட்ட 24.8.2012–க்கு முன்னர் ஏற்பட்ட காலிப்பணியிடங்களில் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கத்தினர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலக வளாகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.


ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் பொதுச்செயலாளர் டி.கனகராஜ் தலைமை தாங்கினார். போராட்டத்தை சி.ஐ.டி.யூ. மாநில தலைவர் ஏ.சவுந்தரராசன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இதுகுறித்து டி.கனகராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:–
அரசு உதவிபெறும் பள்ளிகளில் நியமன தடையேதும் இல்லாத நிலையில் ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி அறிக்கை வெளியிடப்பட்ட 24.8.2012–க்கு முன்னர் ஏற்பட்ட காலிப்பணியிடங்களில் தனியார் பள்ளி ஒழுங்காற்று சட்ட விதிகளின்படி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவருக்கும் ஊதியம் வழங்க வேண்டும்.
6.2.2014–ல் வெளியிடப்பட்ட அரசாணை எண்.25–ன் படி 5 சதவீத மதிப்பெண் சலுகையில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களில் 24.9.2014–க்கு முன்னர் நியமனம் பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் நீதிமன்ற ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு நியமன ஏற்பளிப்பு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்
முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீசார் கைது செய்து, பின்னர் மாலை விடுவித்தனர்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png