!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

திங்கள், 29 பிப்ரவரி, 2016

மாற்றுத்திறனாளி மாணவர்களை அலைக்கழிக்கும் அதிகாரிகள்
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, 10ம் வகுப்பு தேர்வில், சலுகை வழங்குவதில் தேர்வுத் துறை இழுத்தடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழக அரசு, ௧௦ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, மூன்று சலுகைகளை அறிவித்துள்ளது.

* தேர்வில், மாணவர் சொல்வதை கேட்டு எழுத, உதவிக்கு ஒருவர் அமர்த்தப்படுவார் 

* மொழிப் பாடத்தில், ஆங்கிலப் பாடம் எழுதுவதில் விலக்கு அளிக்கப்படும்
* செய்முறை தேர்வில் இருந்து விலக்கு என, மூன்று சலுகைகள் தரப்படுகின்றன.
இந்த சலுகைகளை பெற, ஆண்டுதோறும் தேர்வுக்கு முன், பள்ளிகளில் இருந்து மாற்றுத்திறனாளி மாணவர் பெயரில், கல்வித் துறை அதிகாரிகளுக்கு விண்ணப்பம் அளித்து அனுமதி பெற வேண்டும்

இது குறித்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர் கூறியதாவது:அரசு சலுகை அறிவித்தாலும், தேர்வு எழுதுவதற்கு முதல் நாள் வரை, சலுகைக்கான உத்தரவை அதிகாரிகள் தருவதில்லை.
இந்த ஆண்டு, செய்முறை தேர்வு, பிப்., 22ல் துவங்கியது. பிப்., 24ல் தான் தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி, மாற்றுத்திறனாளி சலுகை குறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பினார்.

அதற்குள், பல பள்ளிகளில், மாணவர்கள் கஷ்டப்பட்டு செய்முறை தேர்வை எழுத நிர்ப்பந்தம் செய்யப்பட்டனர். பள்ளி தலைமை ஆசிரியர்கள், செய்முறை தேர்வை எழுத விலக்கு அளித்தாலும், 'தேர்வுத் துறையில் இருந்து எழுத்துப் பூர்வ உத்தரவு வேண்டும்' என, மாவட்ட கல்வி அதிகாரிகள் பிடிவாதமாக இருந்தனர். தேர்வில் பங்கேற்காத மாற்றுத் திறனாளி மாணவர்கள், 'ஆப்சென்ட்' என, பதிவு செய்தனர்.

இதேபோல், ஆங்கிலப் பாடத்திற்கான விலக்கு உத்தரவையும்; தேர்வு நாளில் உதவிக்கு ஆள் உண்டா என்பதற்கான உத்தரவையும் அதிகாரப்பூர்வமாக இன்னும் வழங்கவில்லை. இதை, தேர்வுக்கு முன்னரே அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png