!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

திங்கள், 29 பிப்ரவரி, 2016

சென்னை சைதாப்பேட்டையில் ரூ.100 கோடியில் அரசு அலுவலர்களுக்கு 700 குடியிருப்புகள் ஜெயலலிதா திறந்து வைத்தார்
சென்னை சைதாப்பேட்டையில் ரூ.100 கோடியில் அரசு அலுவலர்களுக்கு கட்டப்பட்டுள்ள 700 குடியிருப்புகளை முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்துவைத்தார்.
இதுகுறித்து, தமிழக அரசு சார்பில்வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–

700 குடியிருப்புகள்
சென்னை, சைதாப்பேட்டை, தாடண்டர் நகரில் 100 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 6.42 ஏக்கர் நிலத்தில், 6,57,020 சதுர அடி கட்டிட பரப்பளவில் கட்டப்பட்டுள்ள அரசு அலுவலர்களுக்கான ‘‘சி–வகை’’ 700 குடியிருப்புகளை காணொலிக் காட்சி மூலமாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
முதல்–அமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட இக்குடியிருப்புகளானது, ஒவ்வொரு கட்டிடத் தொகுதிக்கும் 100 குடியிருப்புகள் வீதம் 7 கட்டிட தொகுதிகளில் 700 குடியிருப்புகளை உள்ளடக்கியதாகும். ஒவ்வொரு குடியிருப்பும் 692 சதுர அடி கட்டிடப் பரப்பளவில், 2 படுக்கையறைகள், ஒரு வரவேற்பறை, குளியலறை மற்றும் கழிப்பறை ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன. மேலும், ஒவ்வொரு கட்டிட தொகுதிக்கும் 2 மின்தூக்கிகள், தீ தடுப்பு உபகரணங்கள், குடிநீர், தரைத் தளங்களில் வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகிய வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன.
தடுப்பணைகள்
சென்னை, தரமணியில் நீர்வள ஆதாரத்துறை சார்பில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாநில நீர் ஆதார மேலாண்மை முகமை அலுவலகக் கட்டிடம்; அரியலூர் மாவட்டம் – அரியலூர் வட்டம், கொள்ளிடம் ஆற்றின் இடது கரையில் உள்ள அழகியமணவாளம் கிராமத்துடன் மேலராமநல்லூர் கிராமத்தை இணைக்கும் வகையில் 48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலம்; பெரம்பலூர் மாவட்டம் – வேப்பந்தட்டை வட்டம், தொண்டமாந்துறை கிராமத்தில் விசுவகுடி அருகில் கல்லாறு ஓடையின் குறுக்கே 33 கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நீர்த்தேக்கம்;
திருச்சிராப்பள்ளி மாவட்டம் – முசிறி வட்டம், சித்தாம்பூர் கிராமத்தில் அய்யாற்றின் குறுக்கே 6 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அணைக்கட்டு; கோயம்புத்தூர் மாவட்டம் – கோயம்புத்தூர் தெற்கு வட்டம், கருஞ்சாமிக்கவுண்டன்பாளையம் கிராமத்தில், குமுட்டிபட்டி நதியின் குறுக்கே 79 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்; களிக்கநாயக்கன்பாளையம் கிராமத்தில் ஆனைமடுவு பள்ளத்தின் குறுக்கே 93 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்; சூலூர் வட்டம், மோப்பிரிபாளையம் கிராமத்தில் வண்ணாத்தங்கரை ஓடையின் குறுக்கே 73 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும்; மேட்டுப்பாளையம் வட்டம், காளம்பாளையம் கிராமத்தில் பெரியபள்ளம் ஓடையின் குறுக்கே 66 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும்; திருச்சிராப்பள்ளி மாவட்டம் – ஸ்ரீரங்கம் வட்டம், அம்மாபேட்டை கிராமத்தில் அரியாற்றின் குறுக்கே 3 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 5 தடுப்பணைகள்;
படுகை அணைகள்
ராமநாதபுரம் மாவட்டம் – பரமக்குடி வட்டம், வைகை ஆற்றின் குறுக்கே தெளிச்சாத்தநல்லூர் கிராமத்தின் அருகில் 19 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும்; பரமக்குடி வட்டம், கமுதக்குடி கிராமத்தின் அருகில் வைகை ஆற்றின் குறுக்கே 19 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் – திருவிடைமருதூர் வட்டம், திருவிசநல்லூர் கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே 2 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 3 படுகை அணைகள்;
கோயம்புத்தூர் மாவட்டம் – கோயம்புத்தூர் தெற்கு வட்டம், நரசீபுரம் கிராமம் வரமூங்கில்பள்ளம் ஓடை மற்றும் தென்னமநல்லூர் கிராமம், சுள்ளிபள்ளம் ஓடை ஆகியவற்றின் குறுக்கே 2 கோடியே 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 செயற்கை முறை நிலத்தடி நீர்ச் செறிவூட்டும் கட்டுமானங்கள்;
சார்கருவூல அலுவலக கட்டிடம்
காஞ்சீபுரம் மாவட்டம் – செங்கல்பட்டு வட்டம், பாலூர் கிராமம், பாலாற்றின் குறுக்கே 16 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கீழ் மட்ட நிலத்தடி தடுப்புச் சுவர் என மொத்தம் 258 கோடியே 88 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பொதுப்பணித் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள், அலுவலகக் கட்டிடம், உயர் மட்டப் பாலம், நீர்த்தேக்கம், அணைக்கட்டு, தடுப்பணைகள், படுகை அணைகள், செயற்கை நிலத்தடி நீர் செறிவூட்டும் கட்டுமானங்கள், கீழ்மட்ட நிலத்தடி தடுப்பு சுவர் ஆகியவற்றை முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று (நேற்று) திறந்துவைத்தார்.
மேலும், தூத்துக்குடியில் 1 கோடியே 37 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட கருவூல அலுவலகக் கட்டிடம்; தூத்துக்குடி மாவட்டம் – சாத்தான்குளம், திருவள்ளூர் மாவட்டம் – அம்பத்தூர், சிவகங்கை மாவட்டம் – இளையாங்குடி, தர்மபுரி மாவட்டம் – பாப்பிரெட்டிப்பட்டி, ஈரோடு மாவட்டம் – அந்தியூர், தேனி மாவட்டம் – போடிநாயக்கனூர் மற்றும் ஆண்டிப்பட்டி, நாகப்பட்டினம் மாவட்டம் – வேதாரண்யம், கிருஷ்ணகிரி மாவட்டம் – போச்சம்பள்ளி, புதுக்கோட்டை மாவட்டம் – மணமேல்குடி ஆகிய இடங்களில் தலா 60 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும்; தூத்துக்குடி மாவட்டம் – ஒட்டப்பிடாரம், திருவள்ளூர் மாவட்டம் – ஊத்துக்கோட்டை, சிவகங்கை மாவட்டம் – மானாமதுரை, ராமநாதபுரம் மாவட்டம் – பரமக்குடி, நாமக்கல் மாவட்டம் – பரமத்தி, திருவாரூர் மாவட்டம் – நீடாமங்கலம், மதுரை மாவட்டம் – மேலூர், புதுக்கோட்டை மாவட்டம் – கந்தர்வகோட்டை ஆகிய இடங்களில் தலா 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 18 சார்கருவூல அலுவலகக் கட்டிடங்கள் என மொத்தம் 11 கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்ட கருவூல அலுவலகக் கட்டிடம் மற்றும் 18 சார்கருவூல அலுவலக கட்டிடங்கள்;
புள்ளி இயல் அலுவலக கட்டிடம்
மதுரையில் 88 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மண்டல புள்ளிஇயல் இணை இயக்குனர் மற்றும் மாவட்ட புள்ளிஇயல் துணை இயக்குனர் அலுவலகக் கட்டிடங்கள்; கடலூர் மாவட்டம் – சிதம்பரத்தில் 12 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும் மற்றும் விருத்தாசலத்தில் 12 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும்; கிருஷ்ணகிரி மாவட்டம் – ஓசூரில் 14 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும்; கரூர் மாவட்டம் – குளித்தலையில் 12 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும்; நீலகிரி மாவட்டம் – கூடலூரில் 14 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள கோட்ட புள்ளிஇயல் அலுவலகக் கட்டிடங்கள் என மொத்தம் 1 கோடியே 56 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மண்டல புள்ளிஇயல் இணை இயக்குனர் அலுவலகக் கட்டிடம், மாவட்ட புள்ளிஇயல் துணை இயக்குனர் அலுவலகக் கட்டிடம் மற்றும் 5 கோட்ட புள்ளிஇயல் அலுவலகக் கட்டிடங்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று (நேற்று) திறந்து வைத்தார்.
முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் சீரிய முயற்சியினால் காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பு மத்திய அரசிதழில் 19–2–2013 அன்று மத்திய அரசால் வெளியிடப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனையை போற்றும் வகையில் சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் கீழ்பகுதியில் உள்ள பூங்காவில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பூங்காவின் மையப் பகுதியில் கல்வெட்டு அமைக்கும் பணி மற்றும் பூங்காவின் நுழைவு வாயிலை புனரமைத்து மேம்படுத்தும் பணி;
மறுகட்டுமான பணிகள்
நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் வெள்ளையாறு மற்றும் பாண்டவையாறு ஆகியவற்றில் 278 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் மறுகட்டுமானப் பணிகள்;
தேனி மாவட்டம் – போடிநாயக்கனூர் வட்டம், சுத்தகங்கை ஓடையில் இருந்து கொட்டக்குடி ஆற்றில் கலக்கும் கூவலிங்க ஆறு வரை பதினெட்டாம் கால்வாயினை 52 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நீட்டித்து உத்தமபாளையம் மற்றும் போடிநாயக்கனூர் வட்டங்களில் உள்ள ஏரிகளுக்கு நீர் வழங்கும் பணி; ஈரோடு மாவட்டம் – பவானி வட்டம், காளிங்கராயன் அணைக்கட்டு வளாகத்தில் 1 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள காளிங்கராயனின் உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம்;
அரசு விருந்தினர் மாளிகை
தூத்துக்குடி மாவட்டம் – திருச்செந்தூர் நகரில் 2 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள அரசு விருந்தினர் மாளிகைக் கட்டிடம்; கோயம்புத்தூர் மாவட்டம் – கீழ்நீராறு, ஆழியாறு, மேல்நீராறு அணைகளை 14 கோடியே 48 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும்; கடலூர் மாவட்டம் – வீராணம் ஏரி மற்றும் வெலிங்டன் நீர்த்தேக்கம் ஆகியவற்றை 14 கோடியே 49 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும்; தர்மபுரி மாவட்டம் – சின்னாறு அணையினை 2 கோடியே 86 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும்; கிருஷ்ணகிரி மாவட்டம் – பாம்பாறு அணையினை 83 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும்; ஈரோடு மாவட்டம் – பவானிசாகர், குண்டேரிப்பள்ளம், வரட்டுப்பள்ளம் ஆகிய அணைகளை 24 கோடியே 71 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும்; திருவள்ளூர் மாவட்டம் – சோழவரம் மற்றும் செங்குன்றம் ஏரிகளையும், சத்தியமூர்த்தி சாகர் அணையையும் 10 கோடியே 45 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும்; காஞ்சீபுரம் மாவட்டம் – செம்பரம்பாக்கம் ஏரியை 3 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்; தஞ்சாவூர் மாவட்டம் – கீழணையை 16 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்; திருவண்ணாமலை மாவட்டம் – சாத்தனூர் அணையை 5 கோடியே 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்; திருச்சிராப்பள்ளி மாவட்டம்– மணப்பாறை வட்டம், வையம்பட்டி கிராமம் அருகில் பொன்னனியாறு அணையை 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்; பரம்பிக்குளம், தூணக்கடவு மற்றும் பெருவாரிப்பள்ளம் அணைகளை 5 கோடியே 36 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், புனரமைத்து மேம்படுத்தும் பணிகள்;
பெரம்பலூர் மாவட்டம் – ஆலத்தூர் வட்டம், கொட்டரை கிராமம் அருகில் மருதையாற்றின் குறுக்கே 90 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் பணி; பெரம்பலூர் மாவட்டம் – குன்னம் வட்டம், அத்தியூர் கிராமத்தின் அருகே வெள்ளாற்றின் குறுக்கே 8 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் – போளூர் வட்டம், அரும்பலூர் கிராமத்தில் செய்யாற்றின் குறுக்கே 7 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் அணைக்கட்டுகள் அமைக்கும் பணிகள்;
தரை பால பணிகள்
மதுரை மாவட்டம் – திருமங்கலம் வட்டம், தெற்காற்றின் குறுக்கே வடகரை அணைக்கட்டுக்கு கீழ் பகுதியில் 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் மற்றும் வெங்கடசமுத்திரம் கிராமத்தில் 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் தரைப் பாலங்கள் அமைக்கும் பணிகள்; தேனி மாவட்டம் – பெரியகுளம் வட்டம், தென்கரை கிராமம் வராகநதி ஆற்றின் குறுக்கே ஆடு பாலம் அருகில் 3 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலம் அமைக்கும் பணி; திருநெல்வேலி மாவட்டம் – அம்பாசமுத்திரம் வட்டம், கல்லிடைக்குறிச்சி நகர கழிவு ஓடையினை மாற்றிவிட கன்னடியன் கால்வாயில் 1 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுரங்க வழி பாலம் கட்டும் பணி; ராமநாதபுரம் மாவட்டம் – பரமக்குடி வட்டம், வைகையாற்றின் இடது கரையில் 4 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சேவை சாலை அமைக்கும் பணி;
தேனி மாவட்டம் – தேனி வட்டம், அம்பாசமுத்திரம் கிராமம், வைகை ஆற்றின் குறுக்கே 2 கோடியே 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்; ஆண்டிபட்டி வட்டம், மயிலாடும்பாறை கிராமம் அருகே வைகை ஆற்றின் குறுக்கே 2 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்; உத்தமபாளையம் வட்டம், டி.ரெங்கநாதபுரம் கிராமம் அருகே சுத்தகங்கை ஓடையின் குறுக்கே 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்; போடி வட்டம், கோடாங்கிபட்டி கிராமம், தீர்த்தத் தொட்டி முருகன் கோவில் அருகே கொட்டக்குடி ஆற்றின் குறுக்கே ஒரு கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்; தூத்துக்குடி மாவட்டம் – எட்டையபுரம் வட்டம், கீழ்நாட்டுக்குறிச்சி கிராமம் அருகே வைப்பாற்றின் குறுக்கே 9 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்; திருவைகுண்டம் வட்டம், சேர்ந்தமங்கலம் (முக்காணி) கிராமத்தின் அருகே தாமிரபரணி ஆற்றின் குறுக்கே 25 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்; திருச்சிராப்பள்ளி மாவட்டம் – லால்குடி வட்டம், வந்தலைகூடலூர் கிராமம் அருகே நந்தியாற்றின் குறுக்கே 3 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும்; முசிறி வட்டம், தண்டலைப்புத்தூர் கிராமம் அருகே அய்யாற்றின் குறுக்கே 2 கோடியே 59 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்; விருதுநகர் மாவட்டம் – சிவகாசி வட்டம், அச்சன்குளம் மற்றும் கோட்டைப்பட்டி கிராமங்களின் அருகில் வைப்பாற்றின் குறுக்கே 11 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் தடுப்பணைகள் அமைக்கும் பணிகள்;
தடுப்பு சுவர்
திருநெல்வேலி மாவட்டம் – பாளையங்கோட்டை வட்டம், திடியூரில் இருந்து பச்சையாற்று கலிங்கலின் கீழ் பகுதி வரை ஆற்றின் வலதுபுற தடுப்புச் சுவருக்கும், சாலைக்கும் இடையிலான பகுதியில் 2 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மழைநீர் வழிந்தோடி கால்வாய் அமைக்கும் பணி; திருவாரூர் மாவட்டம் – மன்னார்குடி வட்டம், பாலையூர் கிராமத்தில் பாமனியாற்றின் குறுக்கே 1 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் மற்றும் திருத்துறைப்பூண்டி வட்டம், உப்பூர் கிராமத்தில் கோரையாற்றின் குறுக்கே ஒரு கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் தளமட்டச் சுவர்கள் அமைக்கும் பணிகள்; கன்னியாகுமரி மாவட்டம் – கல்குளம் வட்டம், மண்டைக்காடு புதூரில் 7 கோடியே 82 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கற்குறடுகள் அமைக்கும் பணி என மொத்தம் 626 கோடியே 93 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள திட்டப் பணிகளுக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று (நேற்று) அடிக்கல் நாட்டினார்.
2014–2015–ம் ஆண்டிற்கான சிறந்த அணை பராமரிப்புக்கான விருதினையும், சான்றிதழ்களையும் சேலம் மாவட்டம், மேட்டூர் அணையை சிறப்பாக பராமரித்த பொதுப்பணி துறையின் தலைமை பொறியாளர் எஸ்.அசோகன் மற்றும் கண்காணிப்பு பொறியாளர் ஏ.ஜேம்ஸ் லூர்துசாமி ஆகியோருக்கும், செயற்பொறியாளர் ஆர்.சுப்ரமணியன், உதவி செயற் பொறியாளர் ஏ.வசந்தன், உதவி பொறியாளர் கே.சிங்காரவேல் ஆகியோருக்கு ரொக்கப் பரிசுகளையும், சான்றிதழ்களையும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.
கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை
பணியின்போது உயிரிழந்த பொதுப்பணித் துறையைச் சார்ந்த 111 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 2 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png