!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

திங்கள், 1 பிப்ரவரி, 2016

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் இயக்கங்கள் சார்பில் 2-வது நாளாக போராட்டம்


15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் இயக்கங்களின் சார்பில் 2-வது நாளாக நேற்று போராட்டம் நடைபெற்றது. தலைமை செயலகத்தை நோக்கி செல்ல முயன்ற 145 பேர் கைது செய்யப்பட்டனர்.

2-வது நாளாக போராட்டம்

தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் (ஜாக்டோ) மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும், தன்பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை நீக்கம் செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பது உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்றுமுன்தினம் முதல் 3 நாட்கள் போராட்டத்தை அறிவித்தனர்.

அதன்படி, தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து தலைமை செயலகத்தை நோக்கி தொடர் மறியல் போராட்டத்தில் நேற்றுமுன்தினம்(சனிக்கிழமை) ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஆசிரியர்கள் உள்பட 300 பேரை போலீசார் கைது செய்து, பின்னர் மாலை விடுவித்தனர்.

அதேபோல், நேற்றும்(ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே 2-வது நாளாக போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழக மாநில தலைவர் கே.பூபாலன் தலைமை தாங்கினார். 

எந்த பதிலும் இல்லை

இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (ஜாக்டோ) உறுப்பினர் சங்கரபெருமாள், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழக மாநில தலைவர் கே.பூபாலன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நேற்று (நேற்றுமுன்தினம்) தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டத்தில் ஒரு லட்சம் ஆசிரியர்கள் பங்கு பெற்றனர். முதல்-அமைச்சர் கொடுத்த உறுதியை நிறைவேற்றக் கூறி தான் நாங்கள் போராட்டம் நடத்துகிறோம். கடந்த 5 ஆண்டுகளாக எங்கள் கோரிக்கைகளுக்கு எந்த பதிலும் இல்லை.

145 பேர் கைது

எங்கள் போராட்டத்தின் உண்மையை கருத்தில்கொண்டு, எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுகோள் விடுக்கிறோம். தொடர்ந்து எங்களுடைய கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கவில்லை என்றால், அடுத்தக் கட்டமாக ஜாக்டோ உயர்மட்டக்குழு கூடி வெகு விமரிசையாகவும், உணர்வு பூர்வமாகவும் எங்கள் போராட்டத்தை நடத்துவோம்.

நாளையும் (இன்றும்) இந்த போராட்டம் நடைபெறுகிறது. ஆனால் பள்ளிகள் வழக்கம்போல் நடைபெறும். ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்லாமல் போராட்டத்தில் பங்கேற்பார்கள். இதற்கு முழு பொறுப்பு அரசு தான். கல்வித்துறை அதிகாரிகள் யாரை வைத்து வேண்டும் என்றாலும் நாளை (இன்று) பள்ளிகளை நடத்தட்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட 65 பெண்கள் உள்பட 145 ஆசிரியர்கள் தலைமை செயலகத்தை நோக்கி செல்ல முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் போலீசார் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். பின்னர், அவர்களை விடுவித்தனர்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png