!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 17 பிப்ரவரி, 2016

'ஓடிப்போயி கல்யாணம் கட்டிக்கலாமா!'பிளஸ் 2 மாணவ, மாணவியரால் பரபரப்பு

:திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் முன், பள்ளி சீருடையில் நின்றிருந்த மாணவர்கள் இருவர், மாணவியர் ஐந்து பேர், ஆம்னி வேனில் செல்ல ஆயத்தமாயினர். இவர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த பொதுமக்கள் விசாரித்ததில், அவசரமாக வாகனத்தை கிளப்பி சென்றனர். வாகனத்தில் துரத்தி சென்ற சிலர், காங்கயம் கிராஸ் ரோட்டில், தனியார் மருத்துவமனை அருகில் தடுத்து நிறுத்தினர்.

மாணவியரை எச்சரித்து வீட்டுக்கு அனுப்பி, மாணவர்களை, தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில், திருப்பூர் மாநகராட்சி பள்ளியின், பிளஸ் 2 மாணவனும், அவிநாசி அரசுப் பள்ளி மாணவியும், இதே பள்ளியை சேர்ந்த மற்றொரு மாணவியும், அனுப்பர்பாளையத்தில், பிளஸ் 2 படிக்கும் மாணவனும், நேற்று கயித்தமலையில் திருமணம் செய்து கொள்ள இருந்தனர். இவர்களுக்கு, மூன்று மாணவியர் உதவிக்கு வந்துள்ளனர்.

பள்ளியில் இருந்து ஆசிரியர்கள்வரவழைக்கப்பட்டு, மாணவர்கள்ஒப்படைக்கப்பட்டனர். தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது, 'திருமணம் செய்துகொள்ள சென்ற மாணவனுக்கு, இன்று செய்முறை தேர்வு உள்ளதால், மாணவன் மீதான நடவடிக்கை குறித்து, கல்வித்துறை அதிகாரிகளே முடிவு செய்வர்' என்றார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png