!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

2.50 லட்சம் ஆசிரியர்கள் கைது; மாலையில் விடுதலை

மத்திய அரசுக்கு இணையான ஊதியம் கோரி, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்ட 2.50 லட்சம் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், 6-ஆவது ஊதியக் குழுவில் உள்ள முரண்பாடுகளைக் களைய வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டு நடவடிக்கைக் குழு ( ஜாக்டோ) அமைப்பு சார்பில் ஜனவரி 30-ஆம் தேதி முதல் தொடர் மறியல் போராட்டங்களில் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அரசுப் பள்ளிகளில் வகுப்புகள் நடைபெறாத நிலை ஏற்பட்டது.

சென்னையில்...: இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே திங்கள்கிழமை நடைபெற்ற மறியலில் ஈடுபட்ட 1600-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களில், 800 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்தப் போராட்டத்துக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலர் சத்தியநாதன், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலர் சாந்தகுமார், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்டத் தலைவர் சாந்தகுமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இதுகுறித்து சத்தியநாதன் கூறுகையில், இந்த 3 நாள் மறியல் போராட்டத்தைத் தொடர்ந்து ஜாக்டோ ஆலோசனை நடத்தும். பின்னர் தொடர் வேலைநிறுத்தம், தலைமைச் செயலகம் முற்றுகை உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என்றார்.
மதுரை, திருநெல்வேலி, திருவாரூர், நாகப்பட்டினத்தில்...: இதேபோல், திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவிலில் மறியலில் ஈடுபட்ட 1,000 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். மதுரையில் 1,900 ஆசிரியர்களும் திருவாரூர்-நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட 2,800 ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்ட 2.50 லட்சம் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டதாகவும், இவர்கள் மாலையில் விடுதலை செய்யப்பட்டதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

பள்ளிக்கு வராத ஆசிரியர்கள்: பாடம் நடத்திய இளைஞர்கள்

ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே கொத்தப்பட்டியில் உள்ள பள்ளியில் திங்கள்கிழமை இளைஞர்கள் வகுப்புகளை நடத்தினர்.
கொத்தப்பட்டியில் அரசு ஆரம்பப் பள்ளி, அரசு உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றில் 13 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். போராட்டத்தில் இவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் திங்கள்கிழமை காலை மாணவ, மாணவியர் வழக்கம்போல் பள்ளிக்கு வந்தனர். ஆனால் ஆசிரியர்கள் இல்லாததால் அவர்கள் வெளியே நின்றுகொண்டிருந்தனர். இதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள், இளம்பெண்கள் 9 பேர் பள்ளிக்குச் சென்று மாணவ, மாணவியருக்கு பாடம் நடத்தினர்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png