!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 3 பிப்ரவரி, 2016

சைகா' வைரஸ் பாதித்த நாடுகளுக்கு போகாதீங்க!

'சைகா வைரஸ் பாதித்த நாடுகளுக்கு, அவசியம் இல்லாமல் யாரும் செல்ல வேண்டாம்' என, மத்திய சுகாதார துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. 

கொசுக்களால் பரவும் சைகா வைரஸ், அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த வைரஸ், குறிப்பாக கர்ப்பிணிகளை பாதிக்கிறது. சைகா வைரஸ் பாதிப்புகள் கடுமையாக இருப்பதால், உலக சுகாதார அமைப்பு, உலகளாவிய அவசர நிலையை பிரகடனப்படுத்தி உள்ளது. இந்நிலையில், 'கர்ப்பிணிகள் மற்றும் கர்ப்பமாகும் சாத்தியம் உள்ள பெண்கள், சைகா பாதித்த நாடு களுக்கு செல்ல வேண்டாம்' என அறிவுறுத்தி, மத்திய சுகாதார துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

அரசு சொல்வது என்ன?
* சைகா பாதித்த நாடுகளுக்கு அவசியமின்றி செல்ல வேண்டாம். அந்நாடுகளுக்கான பயணங்களை தள்ளி போடுங்கள் அல்லது பயணங்களை ரத்து செய்யுங்கள்
* கர்ப்பமான பெண்கள் மற்றும் கர்ப்பமாகும் சாத்தியம் உள்ள பெண்கள், சைகா பாதித்த நாடுகளுக்கு செல்ல வேண்டாம் 
* வைரஸ் பாதிப்புக்குள்ளான நாடுகளுக்கு செல்லும் எல்லா பயணிகளும், தனிப்பட்ட பாதுகாப்பு முறைகளை உறுதி செய்ய வேண்டும் 
* நீரிழிவு, ரத்த அழுத்தம், நாள்பட்ட மூச்சுக் கோளாறு உள்ளவர்கள், மருத்துவர்களின் ஆலோசனையை பெற வேண்டும் 
* சைகா பாதித்தவர்களை தனிமைப்படுத்தி வைக்க தேவையான வசதிகள், விமான நிலையங்கள் மற்றும் துறை முகங்களில் ஏற்படுத்தப்படும். 

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png