!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 3 பிப்ரவரி, 2016

'கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவோம்'

 ''எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு தக்க பாடம் புகட்டுவோம்,'' என, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநிலச் செயலர் ரமேஷ் பேசினார்.

ராமநாதபுரத்தில், ஜாக்டோ சார்பில் நடந்த மறியல் போராட்டத்தில் அவர் பேசியதாவது:

தமிழக அரசு, ஆசிரியர்களுக்கு எதிரான போக்கை கடைபிடிக்கிறது. 2011 சட்டசபை தேர்தலில், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், புதிய பென்ஷன் திட்டம் ரத்து என, முதல்வர் வாக்குறுதி அளித்தார். ஐந்து ஆண்டுகள் வாய்ப்பளித்தும் நிறைவேற்றவில்லை.

ஓராண்டாக கோரிக்கைகளை வலியுறுத்தி, நான்கு கட்டங்களாக போராடி வருகிறோம்; எந்த நடவடிக்கையும் இல்லை. ஒரு வாக்குறுதி கூட நிறைவேற்றாமல், 100 சதவீதம் நிறைவேற்றியதாக முதல்வர் கூறுகிறார். 
கடைசி கட்ட மறியல் போராட்டத்திற்கு பிறகாவது, ஆசிரியர் சங்கங்களை அழைத்து பேச வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு தக்க பாடம் புகட்டுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png