!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

அரசு ஊழியர் போராட்டம் போலி வாக்காளர் நீக்கம் பாதிப்பு

:அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால், வாக்காளர் பட்டியலில் இருந்து, போலி வாக்காளர்களை நீக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும், வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணி, நேற்று துவங்கியது. பட்டியலில் உள்ள, இறந்தவர்கள் பெயர்; ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள வாக்காளர்கள் பெயர்; தி.மு.க., சார்பில் அளிக்கப்பட்டுள்ள போலி வாக்காளர் பெயர் போன்றவற்றை வீடு, வீடாக சென்று ஆய்வு செய்து, தேவையற்ற பெயர்களை நீக்கும் பணி, பிப்., 29 வரை நடைபெறும்.அரசு ஊழியர் சங்கம், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. இதனால், சென்னை தவிர பிற மாவட்டங்களில், வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.கள ஆய்வு மூலம் பட்டியல் தயாராகும்தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:

* வாக்காளர் பட்டியலில் உள்ள, இறந்தவர்கள் பெயர் தனியே எடுக்கப்பட்டுள்ளது
.* வாக்காளர் பெயர், தந்தை பெயர், வயது, புகைப்படம் ஆகியவற்றின் மூலம், பட்டியலில், ஒன்றுக்கு மேல் உள்ள வாக்காளர் விபரம், தனியே எடுக்கப்பட்டுள்ளது
.* இப்பட்டியலில், இரண்டு லட்சம் பேர் இடம் பெற்றுள்ளனர். சென்னையில் மட்டும், ஒரு லட்சம் பேர் உள்ளனர். இப்பட்டியல், அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
* தி.மு.க., சார்பில், 51 சட்டசபை தொகுதிகளில் உள்ள, போலி வாக்காளர் விபரம் தரப்பட்டுள்ளது. அதுவும், சம்மந்தப்பட்ட கலெக்டர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
* இந்த, இரண்டு பட்டியலும், ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் வழங்கப்படும். அவர்கள் அப்பட்டியலை, அரசியல் கட்சிகளின் பூத் ஏஜென்ட்களுக்கு வழங்கி, அவர்களின் கருத்துக்களை கேட்டறிவர்.* வீடு வீடாக சென்று பட்டியலில் உள்ள பெயர் குறித்து, கள ஆய்வு மேற்கொள்வர். அதன்பின், பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டியவர் பட்டியலை தயார் செய்வர்.
* அந்த பட்டியல், அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டு, ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்க, கால அவகாசம் வழங்கப்படும். அதன் பிறகு, அந்த பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும்.
* அரசு ஊழியர் வேலை நிறுத்தத்தால், சென்னை தவிர பிற மாவட்டங்களில், வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.* பல மாவட்டங்களில், வருவாய் துறை ஊழியர்கள் வராததால், பெயர் நீக்கம் செய்ய வேண்டியவர்கள் பட்டியல், 'பிரின்ட்' எடுத்து வினியோகம் செய்யப்படாமல் உள்ளது. எனினும், குறித்த காலத்திற்குள் பணிகளை முடிக்க, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பிப்., 22ல் கிராம சபைவாக்காளர் பட்டியலை, அனைவரும் பார்வையிட வசதியாக, பிப்., 22ல், அனைத்து ஊராட்சிகளிலும், சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 
இக்கூட்டத்தில், வாக்காளர் பட்டியலை, பொதுமக்களுக்கு படித்து காட்ட வேண்டும். தவறு இருந்தால் பொதுமக்கள் தெரிவிக்கலாம்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png