!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வியாழன், 11 பிப்ரவரி, 2016

தள்ளாடும் சாரணர் இயக்கங்கள் தலைக்கு ஒரு ரூபாய்! நிதியின்றி முடங்கும் அபாயம்
கோவை மாவட்ட அரசு பள்ளிகளில் நிதி பற்றாக்குறையால் மாணவர்களின் நல்லொழுக்கம், தனித்திறன் மேம்பாட்டுக்காக செயல்படுத்தப்பட்ட சாரணர், சாரணியர் இயக்கங்கள் முற்றிலும் முடங்கியுள்ளது.

மாணவர்களின் நல்லொழுக்கம், மன ஒருமைப்பாடு, சேவை மனப்பான்மை, முதலுதவி, தனித்திறன் மேம்பாடு, தலைமைப்பண்பு மேம்பாடு ஆகிய வற்றுக்காக, என்.சி.சி., - என்.எஸ்.எஸ்., சாரணர், சாரணியர் இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன.


பள்ளிகள் அளவில், ஆறு முதல் பத்தாம் வகுப்பு மாணவர்கள் சாரணர், சாரணியர் இயக்கங்கள் வாயிலாக பயிற்சி அளிக்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில், 35 அரசு பள்ளிகள், ஐந்து மாநகராட்சி பள்ளிகள், 47 அரசு உதவி பெறும் பள்ளிகள் உட்பட, 197 பள்ளிகளில் சாரணர், சாரணியர் இயக்கம் செயல்பட்டுவருகிறது. நிதி பற்றாக்குறை காரணமாகவே, பல்வேறு அரசு பள்ளிகளில் சாரணர், சாரணியர் இயக்கங்கள் துவக்கப்படவில்லை.

பள்ளிகளில் ஒவ்வொரு வாரமும் இவ்வியக்க மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படவேண்டும். தகுதியான மாணவர்களை தேர்வு செய்து பல்வேறு முகாம்களுக்கு அனுப்ப வேண்டும்.

ஆனால், அரசு பள்ளிகளில் நிதியின்மையால் இச்செயல்பாடுகள் முற்றிலும் முடங்கியுள்ளது. அரசு பள்ளிகளில், ஒரு மாணவருக்கு ஒரு ரூபாய் வீதம் மொத்த மாணவனின் எண்ணிக்கைக்கு தகுந்த படி, குறிப்பிட்ட பொது நிதியை வழங்குகிறது. இப்பொது நிதியை பயன்படுத்தி, விளையாட்டு, இலக்கிய போட்டிகள், ஆண்டு விழா, என்.எஸ்.எஸ்., என்.சி.சி., சாரணர் இயக்கங்களின் செயல்பாடுகளுக்கு பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான பள்ளிகளில், 500க்கும் குறைவான மாணவர்களே படிப்பதால், பொது நிதி பற்றாக்குறையில் மட்டுமே உள்ளது.

குறிப்பாக, அரசு பள்ளி மாணவர்களுக்கு சாரணர், சாரணியர் இயக்கத்துக்கான சீருடைகளுக்கு நிதி ஆரம்ப காலம் முதலே இல்லை. இதனால், ஒவ்வொரு முகாமிலும், பள்ளி சீருடையை அணிந்து செல்லும் அவலநிலையே உள்ளது. நிதி பற்றாக்குறையால் போதிய பயிற்சிகள் இன்றி, கவர்னர் விருது, குடியரசுத்தலைவர் விருதுகளுக்கு, அரசு பள்ளி மாணவர்கள் பின்தங்கும் சூழல் காணப்படுகிறது.

அரசு பள்ளி ஒருங்கிணைப்பாளர் ஒருவர் கூறுகையில், 'அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை, பயிற்சிகளுக்கு கூட நிதியில்லை. பெரும்பாலான பள்ளிகளில் இவ்வியக்கம் முடங்கியுள்ளது. தனியார் பள்ளி மாணவர்களே பெரும்பாலும், விருதுகளை தட்டிச்செல்கின்னறர். இதை கருத்தில்கொண்டு அரசு உரிய நடவடிக்கையை எடுக்கவேண்டும்' என்றார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png