!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

திங்கள், 8 பிப்ரவரி, 2016

துணைவேந்தர் தேர்வில் விதிமீறல் கவர்னருக்கு கல்வியாளர்கள் மனு
'வழக்கு நிலுவையில் உள்ள போது, விதிமுறையை மீறி, பல்கலைகளுக்கு துணைவேந்தர்களை நியமிப்பதை தடுக்க வேண்டும்' என, கவர்னரிடம் கல்வியாளர்கள் மனு அளித்துள்ளனர்.
சென்னை பல்கலை, காமராஜர் பல்கலை உட்பட, எட்டு பல்கலைகளில் துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ளன. புதிய துணைவேந்தர்களை நியமிக்க, தேடல் குழுக்களை தமிழக அரசு அமைத்துள்ளது.


'பல்கலைகளில், பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி.,யின் விதிமுறைகள் மீறப்படுகின்றன. விதிமுறைகளை மீறி துணைவேந்தர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்கிறது' என, குற்றம் சுமத்தி, 'மாற்றம் இந்தியா' அமைப்பின் இயக்குனர், 'பாடம்' நாராயணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

இந்த வழக்கின் இறுதி விசாரணை, இன்று பிற்பகலில் நடக்க உள்ளது. இந்நிலையில், திருவள்ளுவர் பல்கலை, சென்னை பல்கலை, மனோன்மணியம் பல்கலை, காமராஜர் பல்கலை, ஆசிரியர் கல்வியியல் பல்கலைகளுக்கு துணைவேந்தர் தேர்வு முடிந்து, இறுதி பட்டியல், இரு தினங்களில் வரும் என, தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதை எதிர்த்து, பல்கலைகளின் வேந்தரும், தமிழக கவர்னருமான ரோசய்யாவுக்கு, 'பாடம்' நாராயணன், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் அனந்த கிருஷ்ணன் ஆகியோர் மனு அனுப்பியுள்ளனர். '

வெளிப்படைத்தன்மைஇல்லை'மனுவில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் உள்ள, 22 பல்கலைகளில் எதிலும் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என, நீதிமன்றத்தில் யு.ஜி.சி., தெரிவித்துள்ளது. துணை வேந்தர் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை; விதிமுறைகள் மீறப்படுகின்றன.

துணைவேந்தர் நியமனம் தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ள போது, புதிய துணைவேந்தர்களை அரசு தேர்வு செய்வது, நீதிமன்றத்துக்கு எதிரானது. எனவே, கவர்னர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png