!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

திங்கள், 8 பிப்ரவரி, 2016

கல்வி வணிக பொருள் அல்ல அரசுக்கு ஆசிரியர்கள் கண்டனம்
கல்வியை வணிக பொருளாக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும்' என, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் வலியுறுத்தியுள்ளனர்.


கோவில்பட்டியில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மாநாடு பிப்.5 ல் துவங்கியது. 3 நாள் மாநாட்டில் பல்வேறு தலைப்புகளில் முக்கிய நிர்வாகிகள் பேசினர்.மாநில துணைத்தலைவர் ஜோசப்ரோஸ் தலைமை வகித்தார்.அரசு ஊழியர் சம்மேளன மாநிலத்தலைவர் முத்துசுந்தரம் ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன: மத்திய அரசு ஆசிரியர்கள் இணையான ஊதியம் இடை நிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்.
பழைய பென்ஷன் திட்டம் அமல் படுத்த வேண்டும். இலவச கல்வி உரிமையை பாதுகாக்க அரசுப் பள்ளிகளை பாதுகாக்க வேண்டும்.
தமிழ்வழிக் கல்வியை பாதுகாக்க, ஆங்கில சுய நிதிப்பள்ளிகளை கட்டுப்படுத்த வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்.
கல்வி,சுகாதாரம், வேளாண் திட்டங்களுக்கு மானியங்களை குறைக்க கூடாது, மத்திய அரசு கல்வியை வணிக பொருளாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என, வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நேற்று மாலை ஆசிரியர்கள் பங்கேற்ற ஊர்வலமும், சவுந்திரராஜன் எம்.எல்.ஏ., பங்கேற்ற பொதுக்கூட்டமும் நடந்தது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png