!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 10 பிப்ரவரி, 2016

ஜெ., பிறந்தநாள்: அரசு பள்ளிகளில் 24 மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு

முதல்வர் ஜெ., பிறந்தநாளை முன்னிட்டு,அரசு பள்ளிகளில் 24 சிறப்பு மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பிப்.,24ம் தேதி தமிழக முதல்வர் ஜெ., பிறந்த நாளையொட்டி, அனைத்து மாவட்டங்களிலும் அரசு பள்ளிகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள், முதியோர், எலும்புமுறிவு, கண், காது, மூக்கு, தொண்டை, பல் உட்படஎல்லா நோய்களுக்கும் தனித்தனியாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.இதற்காக 15 டாக்டர்கள் கொண்ட குழு, செவிலியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

இந்த குழுவினர் கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளில் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும். இந்த முகாம் வரும் பிப்.14ல் துவங்கி பிப்.29ம் தேதிவரை நடத்த வேண்டும். இந்நாட்களில் 24 முகாம்களுக்கு குறையாமல் நடத்த வேண்டும் என, பொது சுகாதாரத் துறையினர் அனைத்து மாவட்ட மருத்துவ இணை இயக்குனர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளனர்.மருத்துவ இணை இயக்குனர் ரவிக்கலா கூறியதாவது:முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு அரசு பள்ளிகளில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு முதலில் சிகிச்சை துவக்குகிறோம். 

இதில் பொதுமக்களும் கலந்து கொண்டு சிகிச்சை பெற கிராமங்களில் தண்டோரா போட்டு அறிவிக்கப்படும். முகாம்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள், தடுப்பூசிகள்அளிக்கப்படும். இதில் கர்ப்பிணிகள், குழந்தைகள், கர்ப்பப்பை நோய்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும், என்றார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png