!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 3 பிப்ரவரி, 2016

டி.என்.பி.எஸ்.சி., பதவி ஐகோர்ட்டில் வழக்கு

 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,க்கு, 11 புது உறுப்பினர் நியமனத்தை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., - பா.ம.க., பிரமுகர்கள், மனுக்கள் தாக்கல் செய்து உள்ளனர்.

அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்களாக, பிரதாப் குமார், சுப்பையா, உள்ளிட்ட, 11 பேரை நியமித்து, தமிழக அரசு, ஜன., 31ல் அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து, சமூக நீதிக்கான வழக்கறிஞர் பேரவை தலைவரும், பா.ம.க., செய்தி தொடர்பாளருமான கே.பாலு, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:

அரசு பணியாளர் தேர்வாணையம் என்பது, அரசியல் சாசனத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. அரசு பணிகளுக்கு, நேர்மையான முறையில் ஆட்களை தேர்வு செய்வதற்காக துவங்கப்பட்ட இந்த அமைப்பு, சுதந்திரமாக செயல்பட வேண்டும். இதற்காக, நேர்மையானவர்கள், அதன் உறுப்பினராக நியமிக்கப்பட வேண்டும்.
தற்போது உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளவர்களில், வழக்கறிஞர்களும் அடங்குவர். இவர்கள், உரிய தகுதியை கொண்டிருக்கவில்லை. ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர். பெண்களுக்கு பிரதிநிதித்துவம் தரவில்லை. எனவே, இவர்களை நியமித்து பிறப்பித்த அரசாணைக்கு, தடை விதிக்க வேண்டும். அந்த அரசாணையை சட்டவிரோதம் என அறிவித்து, நியமனங்களை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. நீதிபதி சுப்பையா முன், தி.மு.க., அமைப்பு செயலர் இளங்கோவன் சார்பில், மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி, ''தேர்வாணைய உறுப்பினர்கள் நியமனத்தை எதிர்த்து, மனு தாக்கல் செய்துள்ளோம். அதை, உடனடியாக விசாரிக்க வேண்டும்,'' என்றார். அதற்கு, நீதிபதி சுப்பையா, மனுவை, இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png