!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

சனி, 26 மார்ச், 2016

10ம் வகுப்பு விடை திருத்தம் ஏப். 15ல் துவக்கம்:கருணை மதிப்பெண் எதிர்பார்ப்பு
தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தம், ஏப்., 15 முதல் துவங்குகிறது. 'தமிழ் தேர்வில் இடம்பெற்ற குழப்பமான வினாக்களுக்கு, கருணை மதிப்பெண் வழங்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், முக்கிய பாடங்களின் தேர்வுகள், ஏப்., 11ல் முடிகின்றன. விருப்ப மொழி பாடத்துக்கு, ஏப்., 13ல் தேர்வு நடக்க உள்ளது. இதையடுத்து, ஏப்., 15 முதல் விடைத்தாள் திருத்தும் பணிகள் துவங்கு கின்றன. அனைத்து தேர்வுகளுக்கும், ஒரே நேரத்தில் விடைத்தாள் திருத்தும் பணி துவங்கும் என, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இந்த நிலையில், தமிழ் தேர்வில் இடம்பெற்ற குழப்பமான வினாக்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக சிவகங்கை மாவட்ட செயலர் இளங்கோ வெளியிட்ட அறிக்கை வருமாறு:
'அரசு பொதுத்தேர்வில் புதிய வினாக்கள் கேட்கப்படும்; வினாத்தாள் திட்ட வரைவு பின்பற்றப்படாது' என, தேர்வுத் துறை அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பவில்லை. மாணவர்களுக்கு பாடப் புத்தகத்தில் உள்ளபடி, தமிழாசிரியர்கள் பயிற்சி அளித்ததுடன், வெள்ளம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அளிக்கப்பட்ட கற்றல் கையேட்டை பின்பற்றியும் பயிற்சி அளித்தனர்.

எதிர்பாராத விதமாக, வழக்கத்திற்கு மாறாக புதிய வினாக்கள் பொதுத்தேர்வில் கேட்கப்
பட்டுள்ளன. எந்தவித முன்னறிவிப்பு இன்றி, புதிய வினாக்கள் கேட்கப்பட்டதால், அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சியிலும், கூடுதல் மதிப்பெண் பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது; தேர்ச்சி சதவீதம் குறைய வாய்ப்புள்ளது.தமிழ் தேர்வு, முதல் தாளில், எட்டு மதிப்பெண்; இரண்டாம் தாளில், 16 மதிப்பெண்களுக்கு புதிய வினாக்கள் வந்துள்ளன. அவற்றுக்கு, கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி, கருணை மதிப்பெண் வழங்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png