!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 16 மார்ச், 2016

மாணவர்களை குழப்பிய குறைந்தபட்ச தேர்ச்சி கையேடு
பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. தேர்வில், கடந்த ஆண்டுகளை விட, கடினமான கேள்விகளும், பாடங்களின் உள்பகுதியிலிருந்தும் புதிய கேள்விகள் இடம் பெற்றதால், மாணவர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.


அரசின் குறைந்தபட்ச தேர்ச்சி கையேட்டை மட்டுமே நம்பி படித்த, ஆயிரக்கணக்கான மாணவர்கள், சில தேர்வுகளில், அதிலுள்ள கேள்விகள் இடம் பெறாததால், குழப்பமடைந்து உள்ளனர். அந்த புத்தகத்தை, இனி வரும் தேர்வுக்கு படிக்கவா, வேண்டாமா என்றும் சந்தேகமடைந்து உள்ளனர்.

இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது:அரசு வழங்கிய குறைந்தபட்ச தேர்ச்சி புத்தகத்துக்கும், தேர்வு வினா தயாரிப்புக்கும் எந்த தொடர்புமில்லை. அதை படித்தால், குறைந்தபட்சம் தேர்ச்சி பெறலாம் என, பல அரசு பள்ளிகளில் வழங்கினர்.குறைந்தபட்ச தேர்ச்சி கையேடு, 2015 டிசம்பரில் தான் வெளியிடப்பட்டது. ஆனால், பொதுத்தேர்வுக்கான வினாத்தாள்கள், அக்டோபரிலேயே இறுதி செய்யப்பட்டு விட்டன. இந்த வினாத்தாள் தயாரிப்புக்கு பின்தான், குறைந்தபட்ச தேர்ச்சி கையேடு வழங்கப்பட்டது. அதனால், வினாத்தாளுக்கும், இந்த கையேட்டுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. பாடப் புத்தகத்தின் அனைத்து பகுதிகளையும் படித்து, இனி வரும் தேர்வுகளிலாவது, நல்ல மதிப்பெண் பெற மாணவர்கள் முயற்சிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

சொன்னது 'தினமலர்!'




'பிளஸ் 2 தேர்வில், வினாத்தாள் கடினமாக இருக்கும். பாடங்களின் உள்பகுதியில் இருந்து, புதிய கேள்விகள் இடம் பெறும்' என, கல்வி ஆண்டின் துவக்கம் முதலே, நமது நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. அதுபோன்றே, தற்போது நடந்துள்ளது.மேலும், 'குறைந்தபட்ச தேர்ச்சி கையேட்டுக்கும், பொதுத்தேர்வு வினாக்களும் தொடர்பு இருக்காது' என, ஆசிரியர்கள் எச்சரிக்கை செய்தது குறித்தும், செய்தி வெளியானது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png