!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 16 மார்ச், 2016

வறுத்தெடுக்க போகுது வெயில் 3 லிட்டர் தண்ணீர் குடிக்கணுமாம்!
கோடையில், வெயில் தாக்கம் வழக்கத்தை விட, 3 டிகிரி அதிகமாகி வறுத்தெடுக்கும் என்பதால், கவனமுடன் இருக்க வேண்டும்; தப்பிக்க தினமும், 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும்' என, டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.


தமிழகத்தில், கோடை துவங்கும் முன்னரே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. மதுரை, சேலம், ஈரோடு நகரங்களில், 102 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாகி உள்ளது. 'ஏப்ரல், மே மாதங்களில், வெப்பத்தாக்கம் வழக்கத்தை விட, 3 டிகிரி அதிகமாகும்; கவனமாக இருக்க வேண்டும்' என, டாக்டர்கள் எச்சரித்து உள்ளனர்.

பொது சுகாதார துறை முன்னாள் இயக்குனர் இளங்கோ கூறியதாவது:'கோடையில், வழக்கத்தை விட வெப்பத்தாக்கம், 3 டிகிரி அதிகமாக இருக்கும்' என, உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. அதை உறுதிபடுத்தும் வகையில், இப்போதே வெயில் தாக்கம், 102 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றுள்ளது. இதனால், பலருக்கு உடல் சோர்வு, அவதி, கை, கால் வலி பாதிப்பு உள்ளது. சிறுநீரகங்கள் வெளியேற்றும் சிறுநீரின் அளவு குறைந்து, வியர்வையாக வெளியேறும். தோல் வியாதிகள் ஏற்பட வாய்ப்புண்டு. சிறுநீரக பைகளில், கல் உருவாகி வலி ஏற்படும்; பலருக்கு மயக்கம் ஏற்படும்.இந்த பாதிப்புகளில் இருந்து தப்ப, தினமும், 3 முதல் 4 லிட்டர் தண்ணீராவது குடிப்பது அவசியம். இளநீர், மோர், ஜூஸ், கரும்புச்சாறு குடிப்பது, தர்பூசணி, வெள்ளரி சாப்பிடுவது நல்லது; செயற்கை குளிர்பானங்கள் வேண்டாம்; தினமும் இருமுறை குளிக்க வேண்டும்; பருத்தி ஆடைகள் நல்லது; இருக்கமான உடைகள் கூடாது; வெறிக்கும் நிறமுள்ள உடைகள் வேண்டாம்; கார உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png