!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வியாழன், 10 மார்ச், 2016

பிளஸ் 2 தேர்வு கூடுதல் விடைத்தாள் இல்லாமல் மாணவர்கள் தவிப்பு
பிளஸ் 2 பொதுத் தேர்வில், கூடுதல் விடைத் தாள் வழங்க ஆசிரியர்கள் காலதாமதம் செய்வதால், மாணவர்கள் அவதிக்கு ஆளாகின்றனர்.
பிளஸ் 2 பொதுத் தேர்வு, 4ல் துவங்கியது. தமிழ் உள்ளிட்ட மொழி பாடத்துக்கு, இரண்டு தாள்கள்; ஆங்கிலம் முதல் தாள் தேர்வு முடிந்து விட்டது; இன்று, இரண்டாம் தாள் தேர்வு நடக்கிறது. வரும், 14 முதல், முக்கிய பாடங்களுக்கு தேர்வு துவங்குகிறது.


ஆனால், கூடுதல் விடைத்தாள் வழங்குவதில் சிக்கலான முறையை தேர்வுத் துறை அறிமுகம் செய்து உள்ளதால், மாணவர்கள், பெற்றோர் பீதியடைந்துள்ளனர். அதாவது,
* முதன்மை விடைத்தாளை எழுதி முடிக்கும் மாணவர்களுக்கு, கூடுதல் விடைத்தாள் வழங்க வேண்டும்
* இந்த ஆண்டு, கூடுதல் விடைத்தாளை தேர்வு அறையில் வைக்கவில்லை. தேர்வு நேரத்தின் கடைசி, ஒரு மணி நேரத்துக்கு முன் தான், முதன்மை கண்காணிப்பாளர் அறையில் இருந்து தேர்வு அறைக்கு கொண்டு வருகின்றனர்
* பல தேர்வு மையங்களில், கூடுதல் விடைத்தாள்களை கொண்டு வருவது இல்லை. மாணவர்கள் கேட்டால், தேர்வு அறைக்கு ஊழியர்கள் அல்லது அலுவலர் பார்வையிட வரும் போது, கூடுதல் விடைத்தாள் கொண்டு வர சொல்கின்றனர்.
சிறிது நேரம் கழித்தே கூடுதல் விடைத்தாள் வந்து சேர்கிறது. விடைத்தாள் வரும் வரை, தேர்வை எழுத முடியாமல் மாணவர்கள் பரிதவிப்புடன் காத்து இருக்கின்றனர்
* இந்த காத்திருப்பால், தேர்வுக்கு நேரமாகி விடுமோ என்ற அச்சத்தில், எழுத நினைத்த விடையையும் மறந்து தவிக்கின்றனர்.

மதிப்பெண் குறையுமா?:கூடுதல் விடைத்தாள் கேட்டால், 'கடைசி, இரண்டு பக்கங்களை எழுத துவங்கும் போது தான் கேட்க வேண்டும்' என, ஆசிரியர்கள் கூறுகின்றனர். அதனால், கூடுதல் விடைத்தாள் வர, 10 நிமிடங்களுக்கு மேல் தாமதமாகிறது. அதனால், எங்களால் நினைத்த மதிப்பெண் பெற முடியுமா என அச்சம் அடைந்துள்ளோம்.

மாணவர்கள்

எதிர்காலத்துடன் விளையாடுவதா?:காகிதத்தை மிச்சம் பிடிப்பதற்காக, மாணவர்களின் எதிர்காலத்துடன் தேர்வுத்துறை விளையாடுகிறது. கல்வித்துறையில் எவ்வளவோ முறைகேடுகள் நடக்கின்றன. பல திட்டங்களின் பெயரில், கோடிக்கணக்கில் செலவு செய்கின்றனர். பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாளில் தான், அரசின் செலவை குறைக்க வேண்டுமா? 'ஏசி' அறையில் அமர்ந்து திட்டமிடும் அதிகாரிகள், மாணவர்களுக்காக தான் நாம் பணியாற்றுகிறோம் என நினைக்க வேண்டும்.

பெற்றோர்


Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png