!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வியாழன், 10 மார்ச், 2016

பிளஸ் 2 தேர்வு கட்டுப்பாடுகள் எதிரான வழக்கு தள்ளுபடி
பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பெல்ட், காலணிகள் அணிந்து தேர்வறைக்குள் வரக்கூடாது என்ற கல்வித்துறையின் வாய்மொழி நிபந்தனைகளுக்கு தடை விதிக்க வேண்டும்,' என, தாக்கலான மனுவை, உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.திருநெல்வேலி அப்துல் வகாபுதீன் தாக்கல் செய்த பொதுநல மனு: பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, கட்டுப்பாடுகள் விதிக்கும் போர்வையில் பெல்ட், காலணிகள் அணிந்து, தேர்வறைக்குள் வரக்கூடாது என வாய்மொழியாக கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.


மாணவர்கள் 'பிட்' காகிதங்களை 'பெல்ட்', காலணிக்குள் மறைத்து கொண்டு செல்வர் என்ற யூகத்தின்படி இந்நிபந்தனைகளை விதித்துள்ளனர். இது, மாணவர்களின் அடிப்படைஉரிமையில் தலையிடுவதாகும். 
காலணிகளை தேர்வறைக்கு வெளியில் விட்டுச் சென்றால், அது தொலைந்து விடுமோ என்ற பதட்டத்தில் தேர்வு எழுதுவர். மாற்றாக 'ஸ்கேனிங்' முறையில், உடலை பரிசோதித்து தேர்வறைக்குள் அனுமதிக்கலாம்.
பெல்ட், காலணிகள் அணிந்து தேர்வறைக்குள் செல்லக்கூடாது என்ற வாய்மொழி நிபந்தனைகளுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, அப்துல் வகாபுதீன் மனு செய்திருந்தார்.

நீதிபதிகள் எஸ்.மணிக்குமார்,
சி.டி.செல்வம் அமர்வு, 'மனுதாரர் தகுந்த ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை. மனுதாரர் கோரும் நிவாரணத்தை அளிக்க முடியாது. மனுவை தள்ளுபடி செய்கிறோம்,' என்றது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png