!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வியாழன், 10 மார்ச், 2016

கைப்பையை போட்டு பஸ்சில் 'சீட்' பிடிக்க முயன்ற ஆசிரியையின் 40 சவரன் 'அபேஸ்'
பஸ்சில், 'சீட்' பிடிக்க முயன்றபோது, திருவண்ணாமலை பள்ளி ஆசிரியையிடம், 40 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.பஸ்கில் கூட்டம்திருவண்ணாமலை, சிவராத்திரி மடத்தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன். இவர், மேட்டூர் அணையில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பழனியம்மாள், 52; தி.மலை நகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியில், ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.


தன் கணவரை பார்ப்பதற்காக, பழனியம்மாள், மகன் வெங்கடேசனுடன், 24, நேற்று காலை
மேட்டூருக்கு புறப்பட்டார். வீட்டில் நகைகளை வைத்தால், பாதுகாப்பாக இருக்காது என்று கருதி, 40 சவரன் நகைகளை துணிப்பையில் வைத்து, திருவண்ணாமலை பேருந்து நிலையத்துக்கு வந்தார்.

அங்கு, சேலம் செல்லும் பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால், தங்களிடம்இருந்த ஐந்து கைப்பைகளையும், பஸ்சின் வெளியில் இருந்தவாறு ஒவ்வொன்றாக, ஜன்னல் கம்பி
வழியாக உள்ளே வைத்து, பஸ்சில் சீட் பிடிக்க முயன்றனர்.

பயணிகள் கூச்சல்:பின், பஸ்சுக்குள் ஏறி சென்று பார்த்தபோது, நகை வைத்திருந்த கைப்பை காணாமல் போனதைக் கண்டு, அதிர்ச்சியடைந்து கூச்சல் போட்டனர். பஸ் முழுவதும் தேடியும் காணவில்லை. பயணிகள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி, நகை வைத்திருந்த கைப்பையை, மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png