!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

சனி, 19 மார்ச், 2016

பிளஸ் 2 கணிதத்தில் 'சென்டம்' எடுப்பது எளிது:மாணவர்கள் உறுதி
பிளஸ் 2 கணிதத்தேர்வு நேற்று நடந்தது. இதில் 200க்கு 200 எடுப்பது எளிதென ராமநாதபுரம் மாவட்ட மாணவர்கள் தெரிவித்தனர்.மாணவர்கள் கூறியதாவது:வி.பாலசந்திரன், டி.டி.விநாயகர் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம்: பகுதி 1ல் முதல் 40 ஒரு மதிப்பெண் வினாக்களில் 26வது கேள்விக்கு மட்டும் பதில் அளிப்பதில் குழப்பம் இருந்தது. புத்தகத்தின் உள்ளிருந்தும், பெற்றோர் ஆசிரியர் சங்கம் வெளியிட்ட வினா வங்கியில் இருந்தும் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. 6 மற்றும் 10 மதிப்பெண் வினாக்களில் கட்டாய வினாக்கள் முதல் தொகுதியில் இருந்து கேட்கப்பட்டிருந்தன. 200க்கு 200 எளிது.


எம். பாலஷாலினி, செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம்: மூன்று பாகங்களிலும் எளிதாகவே வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. பாகம் 2ல், 6 மதிப்பெண் வினா எண் 52, பாகம் 3ல், 10 மதிப்பெண் வினா எண் 68 மட்டும் புத்தகத்தின் வெளியே கேட்கப்பட்டிருந்தன. இவ்விரு வினாக்களையும் சாய்சில் விட்டு விட்டோம். 200க்கு 200 -எடுக்கும் அளவுக்கு வினாக்கள் எளிமை.

ஐ.ஷாமிலி தேவி, விவேகானந்தர் வித்யாலயா பள்ளி, ராமேஸ்வரம்: கணித தேர்வில் 1,6,10 மார்க் வினாக்கள் குழப்பம் இன்றி, பாடப் புத்தகத்தில் எடுக்கப்பட்டுள்ளது. புத்தகத்தில் படித்த வினாக்கள், எழுதி பார்த்த கணக்குகள் கேட்கப்பட்டதால் சிரமம் இல்லாமல், எளிதாக விடையளித்தேன். கணிதத்தில் 200 மார்க் உறுதியாக எடுப்பேன்.

எம்.ஞானசேகரன், ஆசிரியர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆர்.எஸ்.மங்கலம்: வினாக்கள் கடினம் அல்ல. முன்று பாகங்களிலும் சராசரி, மெதுவாக கற்கும் மாணவர்களும் விடையளிக்கும்படி வினாக்கள் அமைந்திருந்தன. பத்து மதிப்பெண் வினாக்களில் 1, 3, 6
பாடங்களில் இதுவரை கேட்காதவை. சராசரி மாணவர்கள் 150 மதிப்பெண் வரை எடுக்கலாம். நன்றாக படிக்கும் மாணவர்கள் நிறைய பேர் 'சென்டம்' எடுப்பது உறுதி.
இவ்வாறு கூறினர்.-

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png