!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

சனி, 19 மார்ச், 2016

பிளஸ் 2 புவியியலில் 'சென்டம்' கஷ்டம்
பிளஸ் 2 புவியியல் தேர்வில், பாடத்தில் இல்லாத வினா மற்றும் பாடத்திற்கு உள்ளே 'துளைத்து... துளைத்து' கேட்கப்பட்ட வினாக்களாலும் மாணவர்கள் 'சென்டம்' பெறு வது கேள்விக்குறியாகி உள்ளது.
இதுகுறித்து புவியியல் பாட ஆசிரியர்கள் கூறியதாவது:எந்த ஆண்டும் இல்லாத வகையில் ஒரு மதிப்பெண், ஐந்து மதிப்பெண் 'பொருத்துக' பகுதிகளில் மாணவர்களை குழப்பும் வகையில் வினாக்கள் இடம் பெற்றன. 'சரியான வாக்கியத்தை தேர்வு செய்து எழுதுக' பகுதியில் இடம் பெற்ற 41, 42வது வினாக்கள் ஒன்று மற்றும் இரண்டாம் பாடங்களில் ஏதோ ஒரு மூலையில் உள்ள 'பாராகிராபில்' ஒரு வரியை கேட்டுள்ளனர். பாடத்தில் இல்லாத வினா மேலும் 47வது வினா 'இன்சாட்- இந்திய செயற்கைகோள் வானிலை பற்றிய தகவல்களை தருகின்றன' என இடம் பெற்றுள்ளது. 'இன்சாட்' தொடர்பான தகவல், தமிழ்வழி பாடப் புத்தகத்தில் இல்லை. ஆனால் ஆங்கிலவழி பாடப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதனால் தமிழ்வழி மாணவர்கள் சிரமப்பட்டனர்.


இதேபோல் 'பொருத்துக' பகுதியில் 21 முதல் 30 வினாக்கள் தொடர்ச்சியாக, ஆண்டுகள் (இயர்கள்) தொடர்பாக இடம் பெற்றது மாணவர்களை தடுமாற வைத்துள்ளது. இரண்டு மதிப்பெண் பகுதியில் 54வது வினா 'தாவர இயற்தொகுதிகளை பாதுகாக்க கையாளப்படுகின்ற முறைகள் யாவை' என கேட்கப்பட்டுள்ளது. இது, இதுவரை கேட்கப்படாத பகுதி. இதுபோன்று பல வினாக்கள் மறைமுகமாகவும், பாடத்திற்குள் துளைத்தும் கேட்கப்பட்டன.

புத்தகத்தின் கடைசி பாடமான 'இயற்கை சீரழிவுகள்' பாடத்தில் 83, 84 வினாக்கள் இடம் பெற்றன. 'இப்பாடத்தில் முழுமையான தகவல்கள் இடம்பெறவில்லை' என ஆசிரியர்கள் கூறுகின்றனர். இதனால் பல ஆண்டுகளாக இப்பாடத்தில் இருந்து வினாக்கள் ஏதும் கேட்கப்படுவது இல்லை. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் இரண்டு வினாக்கள் இடம் பெற்றுள்ளன.
பெரும்பாலும் பாடத்திற்குள் இருந்து கேட்கப்படும் வினாக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால், நன்றாக படிக்கும் மாணவர்கள் கூட இந்தாண்டு 'சென்டம்' பெறுவது கேள்விக்குறியாகி உள்ளது, என்றனர்.

'கீ ஆன்சரில்' எதிர்பார்ப்பு :'இன்சாட்' தொடர்பான வினாவிற்கு தமிழ் வழி எழுதிய மாணவர்களுக்கு ஒரு 'போனஸ்' மதிப்பெண் அளிக்க தேர்வுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.'அதேபோல் பாடத்திற்குள் இருந்து சுற்றிவளைத்து கேட்கப்பட்ட வினாக்கள், சர்ச்சையாக உள்ள கடைசி பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட இரண்டு வினாக்கள் போன்றதை கவனத்தில் கொண்டு 'கீ ஆன்சர்' தயாரிக்க வேண்டும்' என ஆசிரியர்கள், மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png