!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வெள்ளி, 18 மார்ச், 2016

வணிகவியலில் நூறுசதவீத மதிப்பெண் நிச்சயம்: மாணவர்கள்  நம்பிக்கை
:பிளஸ் 2 பொதுத்தேர்வில் வணிகவியல் வினாக்கள் மிக எளிதாக இருந்ததால் நுாறு சதவீத மதிப்பெண்கள் பெறலாம், என மாணவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

நேற்று நடந்த வணிகவியல் தேர்வு குறித்து மாணவர்கள் கூறியது:எஸ்.நிவேதா, கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளி, மதுரை: பகுதி 'ஏ' யில் இரண்டு கேள்விகள் புத்தகத்தில் இருந்து கேட்கப்பட்டிருந்தன. பகுதி பி, சி யில் உள்ள கேள்விகள் ஏற்கனவே நிறைய முறை கேட்கப்பட்டிருந்தன. எல்லா மாணவர்களுமே எளிதாக மதிப்பெண் பெறும் வகையில் வினாத்தாள் இருந்தது.


ஆர்.ராமலட்சுமி, அரசு மேல்நிலைப் பள்ளி, மகபூப்பாளையம், மதுரை: பெரும்பாலான கேள்விகள் புத்தகத்தின் பின் பகுதியில் இருந்தே கேட்கப்பட்டிருந்தன. கடந்தாண்டு பொதுத் தேர்வு கேள்வித்தாள், அரசு வெளியிட்ட 'புளூபிரின்ட்' கேள்வித்தாள்கள் உதவி யாக இருந்தன. 200 க்கு 200 மதிப்பெண்கள் எடுப்பேன் என்ற
நம்பிக்கை இருக்கிறது.

ராஜலட்சுமி, ஆசிரியை, அரசு மேல்நிலைப் பள்ளி, முள்ளிப்பள்ளம்: கடந்த தேர்வுகளில் கேட்கப்பட்ட பெரும்பாலான வினாக்கள் இந்த தேர்விலும் இடம் பெற்றிருந்தன. நான்கு மதிப்பெண்
பகுதியில் 41வது வினாவில் 'அமைப்பு - வரையறு' என்பதை ஆசிரியர் பெயர் குறிப்பிடாமல் பொதுவாக 'அமைப்பு -வரையறு' என கேட்கப்பட்டிருந்ததால் அனைத்து மாணவர்களும் ஏதாவது ஓர் ஆசிரியரின் வரையறையை எழுதியிருப்பார்கள்.

எட்டு மதிப்பெண் பகுதியில், 'தனி வரையறு நிறுமத்திற்கும், அரசு வரையறு நிறுமத்திற்கும் உள்ள வேறுபாடு' என்ற வினா கேட்கப்பட்டது. இது 20 மதிப்பெண்ணிற்கானது. இதை தேர்வு செய்தவர்களுக்கு அதிக நேரம் தேவைப்பட்டிருக்கும். அதேபோல் 20 மதிப்பெண் வினா பகுதியில் இடம் பெற்ற 'பொது கழகத்தில் இயல்புகளின் நிறை, குறைகளை எழுதுக' வினாவும் அடிக்கடி கேட்கப்பட்டது. எளிதில் 'சென்டம்' பெறலாம்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png