!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வெள்ளி, 18 மார்ச், 2016

தேர்வு நேரத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி புல்லரிக்க வைக்கும் 'கடமை உணர்வு'
பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் என, ஆசிரியர்கள் 'பிசி'யாக இருக்கும் நேரத்தில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) சார்பில் பயிற்சி வகுப்பு அறிவிக்கப்பட்டது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.'இத்திட்டம் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 40 பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள், மார்ச் 30க்குள் நடக்கும் ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகளில் ஏதேனும் பத்து நாட்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும்' என உத்தரவிடப்பட்டுள்ளது.


தற்போது பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் ஒரே நேரத்தில் நடக்கின்றன. பார்வையற்ற மாணவர்களுக்காக 'சொல்வதை எழுதும்' (ஸ்கிரைப்) தேர்வுப்பணியில் பட்டதாரி ஆசிரியர்களும், உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளின் இடைநிலை மற்றும் சிறப்பாசிரியர்கள் பிளஸ் 2 தேர்வில் அறைக் கண்காணிப்பாளர் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

இதுதவிர பிளஸ் 2, பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியும் துவங்கி உள்ளது. அங்கும், மைய மதிப்பீட்டு பணிகளிலும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். நெருக்கடியான சூழ்நிலைக்கு இடையில் 'பணி மேம்பாட்டு' பயிற்சியும் அறிவிக்கப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் முருகன், துணைத் தலைவர் குமார் கூறியதாவது:சரியாக திட்டமிடாமல், ஒதுக்கப்பட்ட நிதியை எப்படியாவது பயன்படுத்தி கணக்கு காட்ட வேண்டும் என்பதற்காக தேர்வுகளுக்கு இடையே பயிற்சி... பயிற்சி... என ஆசிரியர்களை இம்சைப்படுத்துவது நியாயம் இல்லை. அதிகாரிகளின் 'கடமை உணர்ச்சிக்கு' அளவே இல்லையா என்றனர்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png