4.23 லட்சம் அரசு ஊழியர் குடும்பங்களின் ஓட்டு யாருக்கு?
:தமிழகத்தில், 2003 ஏப்., 1 முதல் பணியில் சேர்ந்த நான்-கு லட்-சத்து, 23 ஆயி-ரத்து, 441 அரசு ஊழியர், ஆசிரியர்கள், புதிய ஓய்-வூ-திய திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். ஊழியர்களிடம் வசூலித்த தொகை மற்றும் அர-சின் பங்கு தொகை என, 8,543 கோடி ரூபாயை ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்திடம், தமிழக அரசு செலுத்தவில்லை.
ஆட்-சிக்கு வந்த பின், எந்த முயற்-சியும் எடுக்-கவில்-லை அதிருப்தி அடைந்த ஊழியர்கள் தொடர் வேலை-நி-றுத்த்தில் ஈடு-பட்-டனர். இதனால், 'புதிய ஓய்-வூ-திய திட்டம் குறித்து, ஆய்வு செய்ய வல்லுனர் குழு அமைக்கப்படும்' என, முதல்வர் அறிவித்தார்; ஆனால், அரசாணை வெளியிடவில்லை.
இதனால் அரசு ஊழியர், ஆசிரியர்கள் அதிருப்தியில் உள்ளனர். இதை பயன்படுத்தி அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளைசந்தித்து, தி.மு.க., மாவட்டச் செயலர்கள் ஆதரவு கோரி வருகின்றனர். மக்கள் நலக் கூட்டணியினரும் ஆதரவு கேட்டுள்ளனர்.
'வல்லுனர் குழு அமைக்கும் முன், தேர்தல் அறிவித்து விட்டனர். மீண்டும் ஆட்சிக்கு வந்தால், வல்லுனர் குழு அமைக்கப்படும்' என அ.தி.மு.க.,வினர், 'தாஜா' செய்-து வருகின்றனர்.
இதனால், 4.23 லட்சம் அரசு ஊழியர் குடும்பங்களின் ஓட்டு யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.