!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

ஞாயிறு, 20 மார்ச், 2016

ரேஷன் முறைகேடை தடுக்க 'மொபைல் ஆப்' : வீட்டில் இருந்தபடியே விவரம் பெறலாம்
பொதுமக்கள் வீட்டில் இருந்த படியே, ரேஷன் கடைகளில் உள்ள உணவு பொருட்கள் இருப்பை தெரிந்து கொள்ள, 'மொபைல் ஆப்' வசதியை அறிமுகம் செய்ய,உணவு துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில், ரேஷன் கடைகளில், அரிசி இலவசமாகவும்; சர்க்கரை, பருப்பு உள்ளிட்டவை குறைந்த விலையிலும் வழங்கப்படுகின்றன. ரேஷன் கடை ஊழியர்கள், பொது மக்களுக்கு குறைந்த அளவில் பொருட்களை வழங்கி, எஞ்சியதை கள்ளச்சந்தையில் விற்கின்றனர்.


இதை தடுக்க, மக்கள் வீட்டில் இருந்தபடியே, ரேஷன் கடைகளில் உள்ள பொருட்களை இருப்பை தெரிந்து கொள்ள, 'மொபைல் ஆப்' வசதியை அறிமுகம் செய்ய, உணவு துறை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர்கூறியதாவது:

ரேஷன் கார்டுதாரரின் மொபைல் போன் எண்ணுக்கு, 'மொபைல் ஆப்' பதிவிறக்கம் செய்வதற்கு அதன், 'லிங்க்', எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பப்படும். இதை, பதிவிறக்கம் செய்த பின், ரேஷன் கார்டு எண்ணை பதிவு செய்ய வேண்டும்.

அதன் பின், அவர் பொருட்கள் வாங்கும் ரேஷன் கடையுடன், அந்த எண் இணைக்கப்படும்.
'மொபைல் ஆப்' வசதியில் உள்ள கடை எண்ணை, 'கிளிக்' செய்தால் கடையில், என்ன பொருட்கள் உள்ளது என்ற விவரம் ரேஷன் கார்டுதாரரின் மொபைல் போனில் தெரியும்.
அவர், அலைச்சல் இல்லாமல், கடையில் பொருட்கள் இருக்கும் போது, வாங்கி கொள்ளலாம். ரேஷன் கடை ஊழியர்கள், 'பொருட்கள் இல்லை' என, பொது மக்களை அலைக்கழிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png