!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

செவ்வாய், 8 மார்ச், 2016

கும்பகோணம் பள்ளி தீ விபத்து: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
கும்பகோணம் பள்ளி தீ விபத்தில், 94 குழந்தைகள் பலியான வழக்கில், 'தண்டனையை எதிர்த்த மேல்முறையீட்டு மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டு விவரங்களை, அரசு தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கும்பகோணம் கிருஷ்ணா அரசு உதவி பெறும் பள்ளியில், 2004 ஜூலை, 16ல் தீ விபத்து ஏற்பட்டது. 94 குழந்தைகள் தீயில் கருகி பலியாகினர்; 18 பேர் காயமடைந்தனர்.


பள்ளி நிறுவனர் புலவர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனை, தாளாளர் சரஸ்வதி, தலைமை ஆசிரியை சாந்தலட்சுமி, மாவட்ட துவக்கக் கல்வி அலுவலர் பாலாஜி, துவக்கக் கல்வி அலுவலக கண்காணிப்பாளர் தாண்டவன் உட்பட எட்டு பேருக்கு, ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து, தஞ்சாவூர் நீதிமன்றம், 2014 ஜூலை, 30ல் உத்தரவிட்டது.
தண்டனையை ரத்து செய்யக்கோரி, புலவர் பழனிச்சாமி, சரஸ்வதி, சாந்தலட்சுமி, பாலாஜி, தாண்டவன், மாவட்ட துவக்கக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் துரைராஜ், மாவட்ட துவக்கக் கல்வி அலுவலக உதவியாளர் சிவப்பிரகாசம் ஆகியோர், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இதற்கிடையில், முன்னாள் மாவட்ட துவக்கக் கல்வி அலுவலர் பி.பழனிச்சாமி, மாவட்ட கல்வி அலுவலர் நாராயணசாமி உட்பட, 11 பேரை கீழமை நீதிமன்றம் விடுதலை செய்தது. இதை எதிர்த்து அரசும், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. நீதிபதிகள் ஏ.செல்வம், ஜி.சொக்கலிங்கம் கொண்ட அமர்வு விசாரித்தது. அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ரமேஷ், மனுதாரர் வழக்கறிஞர்கள் முகைதீன்பாஷா, பாலசுந்தரம், வெங்கடேஸ்வரன், ஆனந்தகுமார், அந்தோணி அருள்ராஜ் ஆஜராயினர்.நீதிபதிகள், 'மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டு விவரங்களை, அரசுத் தரப்பில் மார்ச், 22ல் தாக்கல் செய்ய வேண்டும்' என்றனர்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png