!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

செவ்வாய், 8 மார்ச், 2016

டி.என்.பி.எஸ்.சி., குளறுபடி:பாதிக்கப்பட்டோர் கண்ணீர்
:டி.என்.பி.எஸ்.சி., சார்பில், 2014ல், 'குரூப் - 4' தேர்வு நடந்தது. தேர்ச்சி பெற்றோருக்கு, 2015 டிசம்பரில் நேர்காணல் நடந்தது. இதில், 28 பேருக்கு சிவகங்கை வருவாய் துறையில், 'டைப்பிஸ்ட்' பணியிடம் வழங்கப்பட்டது. மாவட்டத்தில், 20 பணியிடங்கள் மட்டுமே காலியாக உள்ளது. இதனால் டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் கேட்டு பணி நியமனம் வழங்குவதாக கூறி, அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்.


மார்ச், 4ல் தேர்தல் தேதி அறிவித்ததால், அன்றைய தினம் அவசர அவசரமாக, 20 பேருக்கு மட்டும் பணி நியமன ஆணை வழங்கினர். ராமநாதபுரம், மதுரை, நாகர்கோவில், துாத்துக்குடி பகுதிகளை சேர்ந்த, எட்டு பேருக்கு பணி நியமனம் வழங்கப்படவில்லை. நியமனம் செய்யப்பட்ட, 20 பேரும் நேற்று பணியில் சேர்ந்தனர். இதனால் பாதிக்கப்பட்டோர் நேற்று, கலெக்டர் மலர்விழியிடம் புகார் தெரிவித்தனர். அவரோ, 'என்னால் ஒன்றும் செய்ய முடியாது. டி.என்.பி.எஸ்.சி., தலைவரை சந்திக்குமாறு' தெரிவித்தார். இதனால் பாதிக்கப்பட்டோர் கண்ணீருடன் சென்றனர்.

சென்னை டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் கேட்டதற்கு, சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில், 32 காலி பணியிட பட்டியல் கொடுத்தனர். அதனால் அங்கு கேட்டு கொள்ளுங்கள் என்று கூறி திருப்பி அனுப்பினர். இங்கு வந்தால் டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்திற்கு செல்லுமாறு கூறுகின்றனர். தேர்தல் முடிந்தவுடன் பணியில் சேர்ந்தாலும் சீனியாரிட்டி பாதிக்கப்படும். எங்கள் வாழ்க்கையே வீணாகி விட்டதுபாரதிராஜா, ராமநாதபுரம்

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png