!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

சனி, 26 மார்ச், 2016

கிணறு முன் கலையரங்கம்:திட்டமிடாமல் செய்ததால் பள்ளியில் அரசு நிதி வீணடிப்பு
எரியோடு அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில், பயன்பாடற்ற கிணற்றின் அருகே கலை அரங்கம்அமைத்ததால் அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது.எரியோடு அரசு மேல்நிலை பள்ளியில், பள்ளி வளாகத்தினுள் கிணறு ஒன்று உள்ளது. சுற்றுச் சுவருடன் கூடிய இந்த கிணறு மூடப்படாத நிலையில் பயன்பாடற்று உள்ளது.

இந்த கிணற்றின் அருகிலேயே பத்தடி தொலைவில் வேடசந்துார் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் கலை அரங்கம் ஒன்றை அமைத்துள்ளனர். சில லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இந்தகலையரங்கத்தால் மாணவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை. அதன் முன்புறம் உள்ள மூடப்படாத கிணற்றால் மாணவர்கள் அமர்ந்து பார்க்க முடியாது. கலையரங்கம் அமைக்கும் முன் பயன்பாடற்ற அந்தக் கிணற்றை மூடி இருக்கலாம். அல்லது கலையரங்கை வேறு இடத்தில் அமைத்திருக்கலாம்.


இப்படி எதையுமே திட்டமிடாமல் அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர். இதனால் சில லட்சம் நிதி வீணடிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கல்வித்துறை வட்டாரத்தில்கேட்டபோது, “எம்.எல்.ஏ.,நிதியில் இருந்து அரசு பள்ளிக்கு கலையரங்கம் கட்டியது நல்லதுதான். நிதியை ஏனோதானோவென்று செலவழித்ததாகவே தெரிகிறது. மாணவர் பயன்பாட்டுக்காக கட்டியிருந்தால் அருகில் உள்ள கிணற்றை மூடி இருக்கலாம்”, என்றனர். அதிகாரிகளிடம் கேட்டபோது பதில் கூற மறுத்து விட்டனர்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png