!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

செவ்வாய், 12 ஏப்ரல், 2016

10ம் வகுப்புக்கு முக்கிய தேர்வுகள் முடிவு
பத்தாம் வகுப்பு முக்கிய தேர்வுகள், நேற்றுடன் முடிந்தன. பிறமொழி மாணவர்களுக்கான விருப்ப பாட தேர்வுடன், நாளை அனைத்து தேர்வுகளும் நிறைவடைகின்றன.பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு, மார்ச் 15ம் தேதி துவங்கியது. மொழி பாடங்களுக்கு நான்கு தேர்வுகளும், மூன்று முக்கிய பாடங்களின் தேர்வுகளும் நடந்தன.
நேற்று, சமூக அறிவியல் பாடத்துடன், முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் முடிந்தன. சமூக அறிவியல் வினாத்தாள் எளிதாக இருந்ததாக, மாணவ, மாணவியர் தெரிவித்தனர். பெரும்பாலான வினாக்கள், பாடப் புத்தகத்தின் பின்பக்க கேள்விகளில் இருந்தே வந்தன. இந்த தேர்வில், தமிழகம் முழுவதும் பறக்கும்படையினர் நடத்திய ஆய்வில், இரண்டு பள்ளி மாணவர் உட்பட, ஆறு பேர் முறைகேடு புகாரில் சிக்கினர். நாளை, விருப்ப மொழி பாட தேர்வு நடக்கிறது. அத்துடன், 10ம் வகுப்புக்கான அனைத்து தேர்வுகளும் முடிகின்றன.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png